பெயர் குழப்பத்தால் தவறே செய்யாமல் இருமுறை சிறை சென்ற நபர்
மேற்கு அவுஸ்திரேலியாவை சேர்ந்த Marc Smith என்ற நபர், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், அவுஸ்திரேலியாவின் அவசர சேவைக்கு அழைத்து, படகு உரிமையாளர் தன்னை அச்சுறுத்துவதாக புகார் அளித்துள்ளார்.
அதே நேரத்தில், வேறொரு படகு உரிமையாளரிடமிருந்து ஒரு நபர் தனது படகைத் திருடுவதாகப் அவசர சேவைக்கு அழைப்பு வந்துள்ளது.
பெயர் குழப்பத்தால் இருமுறை கைது
அவசரகால அனுப்புநர், Marc பெயரை Mark என்று தவறாக எழுதியுள்ளார். Mark என்ற பெயரில் ஏற்கனவே ஒரு நபர் பிணையை மீறி சென்ற வழக்கில் வாரண்ட் பிறப்பித்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், படகு திருட்டு, திருடப்பட்ட ஸ்மார்ட் ரைடர் அட்டையை வைத்திருந்தது மற்றும் நிலுவையில் உள்ள வாரண்ட் காரணமாக Marc-கிடம் முகவரி உள்ளிட்ட எந்த கேள்விகளும் கேக்காமல் அவரை கைது செய்துள்ளனர்.
Marc தனது பெயரின் தவறான எழுத்துப்பிழையைச் சுட்டிக்காட்டிய போதிலும், அதிகாரிகள் அவரது அடையாளத்தை மேலும் சரிபார்க்கவில்லை. மேலும், அவரது கைரேகைகளும் வாரண்டில் உள்ள நபரின் கைரேகைகளுடன் பொருந்தவில்லை.
இருந்தாலும், அவருக்கு பிணை மறுக்கப்பட்டதால், ஒரு இரவை சிறையில் கழித்துள்ளார்.
மறுநாள் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது பிழையைக் கண்டறிந்த நீதிபதி, உடனடியாக குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்து, அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
இருப்பினும் 3 மாதங்கள் கழித்து மீண்டும் Mark smith தொடர்பான வழக்கில் Marc smith-ஐ காவல்துறையினர் கைது செய்தனர். இது முந்தைய சம்பவத்தின் மறுநிகழ்வு என்று Marc விளக்கிய பின்னர், காவல்துறையினர் தவறை உறுதிப்படுத்திய பின்னர் அவரை விடுவித்தனர்.
பெயர் எழுத்துப் பிழை காரணமாக ஒருவர் தவறுதலாக 2 முறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதற்கு, அவுஸ்திரேலியாவின் ஊழல் கண்காணிப்பு அமைப்பிலிருந்து(CCC) கண்டனம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |