பிரான்சுடனான உறவை புதுப்பித்துக்கொள்ள 584 மில்லியன் டொலர்கள் வழங்கும் அவுஸ்திரேலியா: விவரம் செய்திக்குள்...
சென்ற ஆண்டு அவுஸ்திரேலியா பிரான்சுடன் செய்திருந்த நீர்மூழ்கிக் கப்பல் தயாரிப்பு ஒப்பந்தம் ஒன்றை முறித்துக்கொண்ட விடயம், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பிரான்சுடனான உறவை மீண்டும் புதுப்பித்துக்கொள்வதற்காக 584 மில்லியன் டொலர்கள் செட்டில்மெண்ட் ஒன்றை செய்துள்ளது அவுஸ்திரேலியா.
இதனால், இருநாடுகளுக்குமிடையிலான உறவு மீண்டும் மலர்ந்துள்ளது.
2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், அப்போதைய அவுஸ்திரேலிய பிரதமரான ஸ்காட் மோரிசன், டீசலால் இயக்கப்படும் நீர்மூழ்கிகள் தயாரிப்பு தொடர்பில் பிரான்சுடன் செய்யப்பட்டிருந்த ஒப்பந்தம் ஒன்றை திடுதிப்பென முடிவுக்குக் கொண்டுவந்தார்.
அத்துடன், பிரான்சுடனான ஒப்பந்தத்தை முறித்த கையுடன், அமெரிக்க அல்லது பிரித்தானிய அணு சக்தியால் இயங்கும் நீர்மூழ்கிகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்திலும் இரகசியமாக கையெழுத்திட்டார் அவர்.
இதனால் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான் கடும் கோபமடைந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக Anthony Albanese தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் பிரதமரானதுமே, பிரான்ஸ், நியூசிலாந்து மற்றும் பசிபிக் தீவு நாடுகளுடனான விரிசலை சரி செய்வதற்கான முயற்சிகளைத் துவக்கினார்.
அவ்வகையில்தான் பெரும் இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை என பிரான்சுடனான உறவை மீட்டெடுத்திருக்கிறார் Albanese.
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரத்தில், பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் என்னை பாரீஸுக்கு அழைப்பதற்கான அழைப்பை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறேன் என்கிறார் அவர்.