அவுஸ்திரேலியாவின் புதிய MD-115 விதிமுறை - சர்வதேச மாணவர் விசா செயல்முறையில் மாற்றம்
அவுஸ்திரேலியாவில் சர்வதேச மாணவர் விசா விண்ணப்ப செயல்முறையில் புதிய விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய அரசு, சர்வதேச மாணவர் விசா (Subclass 500) தொடர்பான புதிய Ministerial Direction 115 (MD-115) விதியை நவம்பர் 14 முதல் அமுல்படுத்தியுள்ளது.
இந்த விதி மாணவர்களின் விசா விண்ணப்பங்களை பல்கலைக்கழகங்களின் சேர்க்கை அளவுகள் அடிப்படையில் முன்னுரிமை அளித்து செயல்படுத்தும்.
முன்பு இருந்த MD-111 விதியை மாற்றியுள்ள இந்த MD-115 விதிமுறை மூன்று அடுக்கு அமைப்பை அறிமுகப்படுத்துகிறது.

1- Priority 1 Fast track (வேகமான செயல்முறை)
"New Overseas Student Commencements” (NOSC) ஒதுக்கீட்டில் 80 சதவீதத்திற்கும் குறைவாக பயன்படுத்திய பல்கலைக்கழகங்களுக்கு இது பொருந்தும்.
2- Priority 2 Standard (சாதாரண செயல்முறை)
ஒதுக்கீட்டில் 80 முதல் 115 சதவீதம் வரை பயன்படுத்திய பல்கலைக்கழகங்களுக்கு இது பொருந்தும்.
3- Priority 3 Slow (மந்தமான செயல்முறை)
ஒதுக்கீட்டில் 115 சதவீதத்திற்கும் அதிகமாக பயன்படுத்தியிருந்தால், அந்த கல்வி நிறுவனங்கள் மாணவர் விசா விண்ணப்பங்கள் தாமதமாகும்.
அவுஸ்திரேலியாவில் கடந்த சில ஆண்டுகளில் சர்வதேச மாணவர் விண்ணப்பங்கள் அதிகரித்து, வீட்டு வசதி, கல்வித் தரம், சேவைகள் ஆகியவை சிரமத்திற்கு உள்ளானது.
இதனால் அரசு விண்ணப்பங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த புதிய விதியை கொண்டுவந்துள்ளது.
இந்த MD-115 விதிமுறை மாணவர்களின் விண்ணப்பங்களை தடை செய்யவில்லை, ஆனால், செயல்முறை வேகத்தை மட்டும் தீர்மானிக்கிறது.
இந்நிலையில், 2026 கல்வியாண்டுக்கான விண்ணப்பங்களை முன்கூட்டியே, ஒழுங்கான ஆவணங்களுடன் சமர்ப்பிப்பது மாணவர்களுக்கு நன்மை தரும்.
இந்த மாற்றம், அவுஸ்திரேலியாவின் தேசிய திட்டமிடல் நிலைக்கு (National Planning Level 2026) ஏற்ப கல்வித் தரத்தை பாதுகாக்கவும், மாணவர் வசதிகளை சமநிலைப்படுத்தவும் உதவும் என அரசு தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Australia MD-115 student visa rule, Indian students Australia visa delay, Priority tiers MD-115 visa processing, Australia student visa changes 2025, NOSC allocation visa priority system, Regional colleges faster visa approval, Group of Eight universities visa delay, Australia National Planning Level 2026, Indian students Australia study plans, Australia student visa policy impact