சீனாவில் 75 ஆண்டுகளுக்குப் பிறகு மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு
சீனாவில் 75 ஆண்டுகளுக்குப் பிறகு மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் Liaoning மாகாணத்தில், 1949-ல் மக்கள் குடியரசு நிறுவப்பட்டதிலிருந்து இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய தங்கச் சுரங்கம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
Dadonggou தங்கச் சுரங்கம் எனப்படும் இந்த இடத்தில், சுமார் 2.586 மில்லியன் டன் தாது இருப்பதாகவும், அதில் 1,444 டன் தங்கம் இருப்பதாகவும் சீன இயற்கை வள அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த ஆய்வு, Liaoning Geological and Mining Group எனப்படும் அரசு நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டது.

சுமார் 1,000 தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்ட இந்த திட்டம், வெறும் 15 மாதங்களில் நிறைவு பெற்றது.
இத்தகைய அளவிலான சுரங்க ஆய்வுகள் பொதுவாக பல ஆண்டுகள் எடுக்கும் நிலையில், மிகக் குறுகிய காலத்தில் முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தங்கத்தின் தரம் குறைவாக (0.56 கிராம்/டன்) இருந்தாலும், அளவில் மிகப்பெரியது என்பதால், இதனை “ultra-large” கண்டுபிடிப்பாக அமைச்சகம் வர்ணித்துள்ளது. ஆரம்ப பொருளாதார சாத்தியக்கூறு ஆய்வு ஏற்கனவே நிறைவு பெற்றுள்ளது.
தற்போது தங்கத்தின் விலை கிலோக்கு 115,000 யூரோ உயர்ந்துள்ள நிலையில், இந்த கண்டுபிடிப்பு சீனாவுக்கு 166 பில்லியன் யூரோ மதிப்பிலான வளத்தை வழங்குகிறது.
உலகளாவிய பொருளாதார அசாதாரண சூழ்நிலையில், தங்கம் “safe-haven asset” எனக் கருதப்படுவதால், இந்த கண்டுபிடிப்பு சீனாவின் மத்திய வங்கி கையிருப்பு மற்றும் மக்களின் முதலீட்டு ஆர்வம் ஆகியவற்றுக்கு பெரும் ஆதரவாக இருக்கும்.
சீனா கடந்த ஆண்டுகளில் தங்க ஆய்வுகளை வேகமாக முன்னெடுத்து வருகிறது. 2024-ல் Hunan மாகாணத்தில் 1,000 டன் தங்கம், Gansu-வில் 40 டன் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.
2024-ல் சீனா 377.24 டன் தங்கம் உற்பத்தி செய்தது, ஆனால் உள்நாட்டு தேவைகள் 985.31 டன் என அதிகரித்துள்ளன.
இந்த Liaoning கண்டுபிடிப்பு, சீனாவின் தங்க உற்பத்தி மற்றும் உலக சந்தை நிலையை மாற்றக்கூடிய முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
China largest gold discovery 2025, Liaoning Dadonggou gold deposit, China 1,444 tonnes gold reserves, Ultra-large gold mine China, Gold prices record highs 2025, China mineral exploration surge, Hunan Gansu gold finds China, Safe haven asset gold demand, China gold production 2024 stats, Global gold market impact China