பும்ரா வேகம்.. அஸ்வின் சுழலில் சுருண்டது அவுஸ்திரேலியா! இந்தியா நிதானம்
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் முதல் நாள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் எடுத்துள்ளது.
மெல்போர்னில் இன்று தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.
பும்ரா, அஸ்வின் பந்து வீச்சில் மளமளவென சரிந்த அவுஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 195 ரன்களுக்கு சுருண்டது.
மத்தேயு வேட் (30), ஜோ பர்ன்ஸ் (0), மார்னஸ் லாபுசாக்னே (48), ஸ்டீவன் ஸ்மித் (0), டிராவிஸ் ஹெட் (38), கேமரூன் கிரீன் (12), டிம் பெய்ன் (13), பாட் கம்மின்ஸ் (9), மிட்செல் ஸ்டார்க் (7), நாதன் லியோன் (20) ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஜோஷ் ஹேசில்வுட் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 4 ரன்கள் எடுத்தார்.
India have seven wickets now!
— cricket.com.au (@cricketcomau) December 26, 2020
Live #AUSvIND: https://t.co/qwpaGhOixs pic.twitter.com/3DTOwo18Zn
இந்திய தரப்பில் பந்துவீச்சில் பும்ரா அதிகபட்சமாக (4) விக்கெட்டுகளை சாய்த்தார். தமிழக வீரர் அஸ்வின் (3), சிராஜ் (2), ஜடேஜா (1) விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
தொடர்ந்த முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் எடுத்துள்ளது.
The perfect start for Australia! #AUSvIND pic.twitter.com/YQkJQ5Zi5O
— cricket.com.au (@cricketcomau) December 26, 2020
மயங்க் அகர்வால் டக் அவுட்டானார். ஷுப்மன் கில் (28), புஜாரா (7) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.