அவுஸ்திரேலியாவில் சமூக ஊடக தடை: 4.7 மில்லியன் இளைஞர்களின் கணக்குகள் நீக்கம்
அவுஸ்திரேலியாவில் 4.7 மில்லியன் இளைஞர்களின் சமூக ஊடக கணக்குகள் நீக்கபட்டுள்ளன.
அவுஸ்திரேலியாவில் 16 வயதிற்குக் குறைவானவர்களுக்கு சமூக ஊடக பயன்பாட்டைத் தடைசெய்யும் உலகின் முதல் சட்டம் கடந்த டிசம்பர் 10-ஆம் திகதி அமுலுக்கு வந்தது.
அதிலிருந்து ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், சமூக ஊடக நிறுவனங்கள் 4.7 மில்லியன் இளைஞர்களின் கணக்குகளை நீக்கியுள்ளன.
Instagram, Facebook, Threads, YouTube, TikTok, Snapchat, X (Twitter), Reddit உள்ளிட்ட தளங்கள், சட்டத்தின்படி குறைந்த வயது கணக்குகளை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக eSafety ஆணையர் தெரிவித்துள்ளது.

சட்டத்தை மீறினால் அந்நிறுவனங்களுக்கு 49.5 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் அபராதம் விதிக்கப்படும்.
அவுஸ்திரேலிய பிரதமர் ஆந்தனி அல்பனீஸ், “இது அவுஸ்திரேலியாவின் பெருமை. உலகின் முன்னோடியான சட்டம், தற்போது பல நாடுகளில் பின்பற்றப்படுகிறது” எனக் கூறியுள்ளார்.
ஏற்கனவே பிரான்ஸ், மலேசியா, இந்தோனேஷியா போன்ற நாடுகள் இதேபோன்ற சட்டங்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளன.
ஆனால், “சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது கடினம். இன்னும் சில குறைந்த வயது கணக்குகள் செயல்பாட்டில் உள்ளன” என விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
eSafety ஆணையர் ஜூலி இன்மன் கிராண்ட், “பாதுகாப்பு சட்டங்கள் 100 சதவீத மீறலைத் தடுக்க முடியாது. ஆனால், இது பெரிய முன்னேற்றம்” என விளக்கம் அளித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Australia teen social media ban 2026, Australia 4.7M teen accounts removed, Australia youth online safety law news, Australia social media regulation teens, Australia bans under-16 social media use, Australia eSafety commissioner teen ban, Australia social media crackdown 2026, Australia teen accounts deleted first month, Australia global youth safety precedent, Australia social media ban international impact