ஆஸ்திரேலியாவின் மிகச்சிறந்த 10 சுற்றுலா தளங்கள் இதோ
உலகின் மிகச்சிறிய கண்டம் ஆஸ்திரேலியா. Commonwealth of Australia என அதிகாரபூர்வமாக அழைக்கப்படுகிறது.
வடக்கில் இந்தோனேசியா, கிழக்குத் திமோர், பப்புவா நியூ கினி ஆகிய நாடுகளும், வடகிழக்கில் வனுவாட்டு, நியூ கலிடோனியா ஆகிய நாடுகளும், தென்கிழக்கில் நியூசிலாந்து ஆகிய நாடுகளும் இதன் அயல் நாடுகளாக அமைந்துள்ளது.
சிபிக் மற்றும் இந்திய கடல்களுக்கு நடுவில் இருக்கும் ஆஸ்திரேலியாவானது சுற்றுலாப்பயணிகளுக்கு தனித்துவமான அனுபவத்தைத் தருகிறது.
ஆஸ்திரேலியாவில் நிச்சயம் சுற்றி பார்க்கவேண்டிய சுற்றுலா தளங்கள்
சிட்னி (Sydney)
சிட்னி (Sydney) ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய நகரமும், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகரமும் ஆகும்.
1788ம் ஆண்டில் பிரித்தானியாவிலிருந்து வந்த ஆர்தர் ஃபிலிப் என்பவர் சிட்னி நகரத்தை அமைத்தார். சிட்னியின் நகரப்பிரதேசம், கிழக்கே பசிபிக் பெருங்கடல், மேற்கே நீல மலைகள், வடக்கே ஹோக்ஸ்பரி ஆறு மற்றும் தெற்கே ரோயல் தேசிய பூங்கா ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது.
சிட்னி பெருநகரப் பிரதேசத்தில் புகழ்பெற்ற பொண்டாய் கடற்கரை உட்பட சுமார் 70 துறைமுகங்கள் அல்லது கடற்கரைப்பிர்தேசங்கள் உள்ளன.
இதில் The Sydney Opera House மற்றும் The Harbour Bridge போன்ற மிகவும் பிரபலமானவை.
கான்பெர்ரா (Canberra)
ஆஸ்திரேலியாவின் தலைநகரம் Canberra, 1913ம் ஆண்டு மக்கள் வாழ்வதற்கான சூழ்நிலைகளுடன் உருவாக்கப்பட்டது.
இந்நகரை சூழ்ந்துள்ள மலைகள் இயற்கையின் அழகை மெருகேற்றுகிறது, அரசாங்கம் மற்றும் பாராளுமன்றத்துடன் தொடர்புடைய வரலாற்று நினைவுகள் இங்கு அமைந்திருக்கின்றன.
அரசாங்க உயர் அதிகாரிகள் மற்றும் பிரபலங்களின் இல்லங்கள் இங்கு இருக்கின்றன, இதுதவிர அருங்காட்சியங்கள், தேசிய நினைவுச்சின்னங்கள், கலைக்கூடங்களும் உள்ளது.
கோல்ட் கோஸ்ட் (Gold Coast)
குயின்ஸ்லாந்தின் தென்கிழக்கு கடற்கரையில் பிரிஸ்பேனுக்கு தெற்கே கோல்ட் கோஸ்ட் அமைந்துள்ளது.
ஆண்டு முழுவதும் வெப்பமான வானிலையுடன் பிரகாசமாக ஜொலிக்கிறது, சூரியன், கடலின் வசீகரத்தால் பெரும்பாலானவர்களின் விருப்ப இடமாக மாறியுள்ளது.
ஏராளமான உணவகங்கள், இரவு விடுதிகள், ஜாலியான இரவு வாழ்க்கை என கடலின் அழகை ரசிக்கத்துடிக்கும் விரும்பிகளுக்கு நிச்சயம் சிறந்த அனுபவத்தை கொடுக்கும்.
சூரிய உதயம், சூரிய அஸ்தமனத்தை கண்டுகளிக்கவே ஏராளமான மக்கள் இங்கு படையெடுக்கின்றனர்.
கரிஜினி தேசிய பூங்கா
மேற்கு ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய தேசிய பூங்கா இதுவாகும்.
மிகவும் மலைப்பாங்கான மற்றும் அற்புதமான பள்ளத்தாக்குகள், ஸ்லாட் பள்ளத்தாக்குகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு பிரபலமானது.
அடர் சிவப்பு நிறத்தில் காணப்படும் மூன்று உயரமான சிகரங்கள் மலையேற்ற சாகச விரும்பிகளுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கும்.
இங்கு 800க்கும் மேற்பட்ட தாவர இனங்கள் இருக்கின்றன. மேலும் வனவிலங்குகளான wallabies, echidnas, மற்றும் red kangaroosகளை காணலாம்.
கக்காடு தேசிய பூங்கா
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய தேசிய பூங்கா ஆகும். இது வடக்கு பிராந்தியத்தில் 7,700 சதுர மைல் (20,000 சதுர கிலோமீட்டர்) பரப்பளவைக் கொண்டுள்ளது.
மக்கள் குடியேறிய ஆரம்பகால தளங்களில் ஒன்று கக்காடு, குறிப்பாக பழங்குடியின மக்களுக்கு இப்பகுதி முக்கியத்துவம் வாய்ந்தது.
50,000 ஆண்டுகளுக்கும் மேலாக நிலத்துடனான அவர்களின் தொடர்பு பற்றிய வரலாற்றுப் பதிவுகளை கொண்டது கக்காடு.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்லால் செதுக்கப்பட்ட ஓவியங்களை இங்கு காணலாம்.
மிக அரிதான பறவைகளான hooded parrot மற்றும் Gouldian finch உட்பட தாவர, விலங்கினங்கள், பாலூட்டி இனங்களை காணலாம்.
மெல்பேர்ண் (Melbourne)
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இரண்டாவது நகரம் மெல்பேர்ண், இது சிறந்த உணவு, கலாச்சாரம், கலைகள், பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு ஆகியவற்றிற்கு சிறந்த இடமாகும்.
யர்ரா பள்ளத்தாக்கு, பிலிப்ஸ் தீவு, கிரேட் ஓஷன் ரோடு மற்றும் பல பிரபலமான இடங்களுக்கு இது ஒரு சிறந்த நுழைவாயில் இடமாக திகழ்கிறது.
Great Barrier Reef
Great Barrier Reef வடகிழக்கு ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து கரைக்கு அப்பால் அமைந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய பவளப்பாறை திட்டுத் தொகுதியாகும், 2,900 தனித் திட்டுக்களையும், 2,600 கிமீ தூரம் நீண்டிருக்கும் 900 தீவுகளையும்கொண்டு ஏறத்தாழ 344,400 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் காணப்படுகின்றது.
இங்குள்ள பவளத்திட்டுகள் கோடிக்கணக்கான நுண்ணிய உயிரினங்களால் உருவாக்கப்பட்டுள்ளது, இதனை விண்வெளியில் இருந்தும் காண முடியும்.
1981ம் ஆண்டு உலகப்பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.
The Pinnacles
மேற்கு ஆஸ்திரோவின் நம்புங் தேசியப் பூங்காவிற்குள் அமைந்த சுண்ணாம்புக் கற்களால் ஆன முகடுகள் போன்ற அமைப்பாகும்.
வானிலை மாற்றங்களால் சுமார் 25,000 முதல் 30,000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவான சுண்ணாம்புக்கல் தூண்கள் போன்ற முகடுகள் அதிகபட்சமாக 3.5 மீற்றம் வரை உயரம் கொண்டவை.
பாலைவனத்தின் நிறம் மஞ்சளில் இருந்து வெள்ளையாகவும், இந்திய பெருங்கடலின் நீல நிறம் என சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கிறது.
அதிகாலையில் அல்லது மாலை வேளைகளில் பயணித்தால் நிச்சயமாக kangaroos மற்றும் emus வனவிலங்குகளையும் காணலாம்.
கூபர் பெடி (Coober Pedy)
ஆஸ்திரேலியாவின் Opal தாதுக்கல் சுரங்கத் தொழிலின் மையம் கூபர் பெடி.
இங்கு 60 சதவிகித மக்கள் நிலத்துக்கு அடியில் வசிக்கின்றனர், வீடுகள், தேவாலயங்கள் என பெரும்பாலனவற்றை நிலத்துக்கு அடியில் உருவாக்கியுள்ளனர்.
தாதுக்கல் சுரங்கத் தொழிலே பிரதானம் என்றால் சிவப்பு தூசியால் இந்நகரம் மூடப்பட்டிருக்கும்.
வருடாந்திரம் இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது, காரணம் நகரின் அமைப்பு.
இங்கு சூரிய ஒளி அதிகம் கிடைப்பதால், சூரிய மின் உற்பத்திக்கு சிறந்த இடமாக திகழ்கிறது.
கங்காரூ தீவு (Kangaroo Island):
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மூன்றாவது தீவு இதுவாகும், சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் கடல் மட்டம் உயர்ந்ததால் இத்தீவு உருவாகியிருக்கலாம் என கூறப்படுகிறது.
இதனைதொடர்ந்து குடியேறிகள் நுழைந்தனர், அவர்களின் தொழில் மீன்பிடித்தலே.
சுமார் 509 கி.மீ நீளம் கொண்ட இத்தீவின் ரம்யமான கடற்கரையின் அழகும் சுற்றுலா பயணிகளை ஈர்க்க தவறவில்லை.
மிக முக்கியமாக Flinders Chase தேசிய பூங்கா கண்களுக்கு விருந்தளிக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |