குடியிருப்பு பற்றாக்குறை... வெளிநாட்டவர்கள் வீடு வாங்க 2 ஆண்டுகள் தடை விதித்த நாடு
அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஏற்கனவே உள்ள வீடுகளை வாங்குவதை தடை செய்யும் என்று அதன் அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
எப்போதும் இல்லாத அளவுக்கு
குடியிருப்பு பற்றாக்குறை கடுமையா அதிகரித்துள்ள நிலையிலேயே, அரசாங்கம் இந்த முடிவுக்கு வந்துள்ளது. பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் வீட்டுவசதி அமைச்சர் கிளேர் ஓ'நீல் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,
ஏப்ரல் 1, 2025 முதல் மார்ச் 31, 2027 வரை ஏற்கனவே கட்டுமானம் முடிக்கப்பட்ட குடியிருப்புகளை வெளிநாட்டவர்கள் வாங்குவதற்கு தடை விதிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் இந்த தடை நீட்டிக்கப்படுமா என்பது குறித்து மறுஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவில் வீட்டுவசதி பற்றாக்குறை மீதான அதிருப்தி கடந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியது,
மேலும் இது மே மாதத்தில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு பிரச்சினையாகும். இந்த நிலையில், தற்போதுள்ள தடையானது உள்ளூர் மக்களுக்கு ஆண்டுக்கு சுமார் 1,800 குடியிருப்புக்களை விடுவிக்கும் என வீட்டுவசதி அமைச்சர் கிளேர் ஓ'நீல் தெரிவித்துள்ளார்.
மிகப்பெரிய காரணமாக
மேலும், இந்த முயற்சிகள் என்பது அரசாங்கம் முன்னெடுக்கும் ஒரு சிறிய ஆனால் முக்கியமான நடவடிக்கையாகும் என குறிப்பிட்டுள்ள அமைச்சர், இது விநியோகத்தை அதிகரிப்பதிலும் அதிகமான மக்களுக்கு வீடுகள் கிடைக்க கவனம் செலுத்துவதாகும் என்றார்.
அவுஸ்திரேலியாவில் விலைவாசி உயர்வு அதிகரித்து வருவதற்கு வீட்டுவசதியும் மிகப்பெரிய காரணமாக கூறப்படுகிறது, மேலும் இது வரவிருக்கும் தேர்தலில் ஒரு முக்கிய பிரச்சினையாக உருவெடுக்கும் என்றும் நம்பப்படுகிறது.
2030க்குள் 1.2 மில்லியன் புதிய வீடுகளை கட்டி முடிக்க புதிய சலுகைகளுடன் அரசாங்கம் சமீபத்தில் வீட்டுவசதி சீர்திருத்தங்களை நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |