உலகக் கோப்பை 2023: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலிருந்து அவுஸ்திரேலிய வீரர் விலகல்., காரணம் என்ன?
காலில் காயம் ஏற்பட்டதால் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலிருந்து அவுஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் விளக்கினார்.
2023 ICC ODI உலகக் கோப்பையில் (Australia Cricket Team) கடைசி நான்கு போட்டிகளில் வென்ற அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணி அரையிறுதியை நோக்கி விளையாடிவருகிறது. ஏழாவது போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை (England Cricket Team) எதிர்கொள்ள தயாராக உள்ளது.
இரு அணிகள் மோதும் போட்டி நவம்பர் 4ஆம் திகதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஆனால், இந்த போட்டிக்கு முன்னதாக அவுஸ்திரேலிய அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் (Glenn Maxwell) ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. மேக்ஸ்வெல் காயமடைந்ததால் அவர் தனது அணியின் அடுத்த போட்டியில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்களின்படி, கிளப் ஹவுஸிலிருந்து அணி பேருந்தில் திரும்பும் போது, உட்கார இடம் இல்லாததால், கோல்ஃப் வண்டியின் பின்புறத்தைப் பிடித்துக் கொண்டு க்ளென் மேக்ஸ்வெல் நின்றார். அப்போது அவரது பிடி தளர்ந்து விழுந்து அவருக்கு காயம் ஏற்பட்டது.
இதனால் அவர் ஆறு முதல் எட்டு நாட்களுக்கு concussion protocol-ல் இருக்க வாய்ப்புள்ளது. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
World Cup 2023, Glenn Maxwell, Australia vs England, ICC Cricket World Cup 2023