2023 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லுமா., வாய்ப்புகள் என்னென்ன?
2023 உலகக்கோப்பையை இந்திய அணி வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
உலக்கோப்பை போட்டிகள் தொடங்கியதிலிருந்து இப்போது வரை நடந்த போட்டிகளில் இந்திய அணியின் செயல்திறன் அடிப்படையில், இந்திய அணி இம்முறை கோப்பையை வெல்லும் அனைத்து தகுதிகளுடனும் இருக்கிறது.
எம்.எஸ்.தோனி உறுதி
இதுகுறித்து 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனியும் நேர்மறையான கருத்துக்களையே கூறியுள்ளார்.
தனது தலைமையில் 2011 உலகக் கோப்பை வென்ற இந்திய அணி மிக ஒற்றுமையாக இருந்ததாகவும், சச்சின் டெண்டுல்கருக்காக உலகக் கோப்பையை வென்றுதர வேண்டும் என்று விரும்பியதாகவும் கூறினார்.
ஆனால் 2023-ல் விளையாடிவரும் இந்திய அணியைப் பற்றி எனக்குத் தெரியவில்லை என்றும், கோலிக்காக உலகக் கோப்பை வெல்வார்களோ இல்லையோ, ஆனால், ‘இந்தியாவுக்காக’ உலகக் கோப்பையை உறுதியாக வெல்வார்கள் என்று கூறியுள்ளார்.
2013-ஆம் ஆண்டுக்குப்பின் ஐசிசி சார்பில் இதுவரை எந்தக் கோப்பையையும் இந்திய அணி வென்றதில்லை, ஆனால் இந்தமுறை அந்தக் கனவு நிறைவேறும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.
வெற்றிக்கான வாய்ப்புகள்- சமநிலையான ஃபார்மில் 2023 இந்திய அணி
தற்போது விளையாடிவரும் இந்திய அணி துடுப்பாட்டம், பந்துவீச்சு, ஃபீல்டிங் என மூன்று பிரிவுகளிலும் சமநிலையுடன் இருக்கிறது என்றே கூறலாம். இதுவரை நடந்த போட்டிகளில் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் என 6 அணிகளையும் இந்திய அணி வென்றுள்ளது.
பந்துவீச்சை பொறுத்தவரை, இதுவரை எந்த உலகக் கோப்பைத் தொடரிலும் இல்லாத வகையில் கட்டுக்கோப்பான, சவாலான பந்துவீச்சை இந்திய அணி இப்போது வெளிப்படுத்தி வருகிறது.
இதே செயல்திறன் தொடர்ந்து இருக்குமானால் இந்திய அணிக்குக் கோப்பையை வெல்லும் சாத்தியமும், தகுதியும் உள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான அசத்தலான வெற்றி!
உலகக் கோப்பையில் கடைசியாக 2003-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியை இந்திய அணி வென்றது.
அதன்பிறகு, 20 ஆண்டுகளாக இங்கிலாந்து அணி உலகக்கோப்பையில் ஆதிக்க செலுத்திவந்த நிலையில், லக்னோவில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 29) நடந்த லீக் ஆட்டத்தில், இங்கிலாந்து அணியை 100 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்து.
அதுமட்டுமின்றி, கடந்த 5 ஆட்டங்களில் சேஸிங் செய்துதான் இந்தியா வெற்றி பெற்று வந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தின்மூலம் முதல்முறையாக டிஃபெண்ட் செய்து வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், உலகக் கோப்பைத் தொடரில் 6 போட்டிகளிலும் தோல்வி அடையாத அணியாக 12 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தில் இருக்கிறது.
கே. எல். ராகுல், விராட் கோலி, கே. எல். ராகுல்
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பொறுப்புடன் விளையாடிவருகிறார். கடந்த 6 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் உள்ளிட்ட 398 ஓட்டங்கள் சேர்த்து டாப்-4 வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
அதேநேரம், விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ‘டக்-அவுட்’ ஆகியிருந்தாலும், முந்தைய ஆட்டங்களில் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி ஒரு சதம், இரு அரைசதங்கள் உள்ளிட்ட 354 ஓட்டங்கள் சேர்த்து தனது வலுவான பங்களிப்பை அளித்துள்ளார்.
மேலும், நடுவரிசையில் கே. எல். ராகுல் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார். கடந்த 6 இன்னிங்ஸ்களில் 216 ஓட்டங்கள் சேர்த்து அணிக்கு வலுசேர்த்துவருகிறார்.
பந்துவீச்சில் மிரட்டும் பும்ரா, ஷமி
வேகப்பந்துவீச்சில் பும்ராவும் ஷமியும் எதிரணிகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகவே இருந்துவருகின்றனர். இதுவரை பும்ரா 6 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறார்.
அதேபோல், முகமது ஷமி 3 போட்டிகளில் மட்டுமே களமிறங்கினாலும், 9 விக்கெட்டுகளை தட்டி தனது இருப்பை நிரூபித்து வருகிறார்.
மறுபுறம் சுழற்பந்துவீச்சில் ஜடேஜா, குல்தீப்பின் ஆதிக்கம்
இந்த உலகக் கோப்பை தொடர் முழுவதிலும் ஜடேஜா மற்றும் குல்தீப்பின் பந்துவீச்சு ஆதிக்கம் செலுத்துகிறது. குல்தீப் யாதவ் இந்த உலகக் கோப்பைத் தொடரில் மட்டும் 6 இன்னிங்ஸ்களில் 10 விக்கெட்டுகளையும், ஜடேஜா 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சுழற்பந்துவீச்சுக்கு வலு சேர்த்துவருகின்றனர்.
2023 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இந்த விதத்திலும் குறைகூற முடியாத அளவுக்குச் சிறப்பாக விளையாடி வருகிறது. அரையிறுதியை நெருங்கும் இந்திய அணி இந்தமுறை உலகக் கோப்பையை கையின் ஏந்தும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
indian cricket team 2023 world cup, MS Dhoni, Virat Kohli, Rohit Sharma, Jadeja, Bumra, 2023 ICC World Cup, ICC Men's Cricket World Cup India 2023