இலங்கை அரையிறுதிக்கு செல்லுமா? முட்டுக்கட்டையாக நிற்கும் இரு அணிகள் - இதுநடந்தால் போதும்
2023ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணி அறையிறுதிக்கு முன்னேற சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது.
உலகக்கோப்பை அரையிறுதி
நடப்பு உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணி இரண்டு வெற்றிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. ஆனால் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகளே அரையிறுதியில் மோதும் அணிகள் ஆகும்.
எனினும் இது தற்போதைய நிலைமைதான். தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா அணிகளுக்கு ஒரு வெற்றி மட்டுமே போதும்.
அதேபோல் என்ன நியூசிலாந்து, அவுஸ்திரேலியா எஞ்சிய 3 போட்டிகளில் 2யில் வெற்றி பெற வேண்டும். அரையிறுதியைப் பொறுத்தவரை குறைந்தது ஒரு அணி 6 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
இலங்கைக்கு உள்ள சாத்தியக்கூறுகள்
இலங்கை 5யில் 2 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளதால் மீதமுள்ள 4 போட்டிகளில் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும்.
ஆனால் இதில் தான் பாரிய சிக்கல் உள்ளது. தற்போதைய புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ள இந்தியா, நியூசிலாந்தை எதிர்கொள்வதே இலங்கைக்கு கடுமையான சவால் ஆகும்.
IANS
இதர இரண்டு போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணியை 30ஆம் திகதியும், வங்கதேசத்தை நவம்பர் 6ஆம் திகதியும் இலங்கை சந்திக்கிறது.
தனது கடைசி லீக்கில் நியூசிலாந்து அணியை இலங்கை நவம்பர் 9ஆம் திகதி எதிர்கொள்கிறது. இதுவரை பலம் வாய்ந்த அணியாக உலா வரும் நியூசிலாந்தை கட்டாயம் இலங்கை வென்றாக வேண்டும்.
இலங்கையின் பலம் என்ன?
இலங்கை அணியின் துடுப்பாட்டத்திற்கு நிசங்கா, குசால் மெண்டிஸ், சதீரா சமரவிக்ரமா தூண்களாக விளங்குகிறார்கள். அதேபோல் கடந்த போட்டியில் களமிறங்கிய அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி பந்துவீச்சிற்கு நம்பிக்கை கொடுத்துள்ளார்.
ஏனெனில், இதற்கு முன்பு நடந்த போட்டிகளில் இலங்கை அணி பெரும்பாலும் மதுஷன்காவை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய நிலையில் இருந்தது.
ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தாவீத் மலானை தொடக்கத்திலேயே மேத்யூஸ் வீழ்த்தி நம்பிக்கை அளித்தார். அதனைத் தொடர்ந்து லஹிரு குமார (3), ரஜிதா (2), தீக்ஷணா (1) ஆகியோர் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
எனவே இனி வரும் போட்டிகளில் இலங்கை அணி அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று அரையிறுதிக்கு முன்னேறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
AFP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |