திணறும் உக்ரைன்! கைகொடுத்த அவுஸ்திரேலியா... வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பவுள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
உக்ரைனுக்குள் புகுந்த ரஷ்ய படையினர் தொடர்ந்து ஆறாவது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இரு நாடுகளுக்கு இடையில் சமாதான பேச்சுவார்த்தை நேற்று நடந்த நிலையில் எந்தவொரு முடிவு எட்டப்படவில்லை.
இது தொடர்பான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை தொடர்ந்து நடக்கவுள்ளது. உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்குவதாக ஏற்கனவே ஜேர்மனி உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பவுள்ளதாக அவுஸ்திரேயா தற்போது அறிவித்துள்ளது.
இது உக்ரைனுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் ஒரு விடயமாக பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நாவில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தில் அந்நாட்டுக்கு எதிராக 11 நாடுகள் ஆதரவு தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.