பென் ஸ்டோக்ஸ் படையை வீழ்த்தி.,ஆஷஸ் தொடரை 4-1 என கைப்பற்றிய அவுஸ்திரேலியா
சிட்னியில் நடந்த ஆஷஸ் கடைசி டெஸ்ட் போட்டியில், அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
ஆஷஸ் கடைசி டெஸ்ட் போட்டி
அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்தது.
Pic: Getty Images
இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 384 ஓட்டங்களும், அவுஸ்திரேலியா 567 ஓட்டங்களும் குவித்தன.
பின்னர் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 342 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆக, அவுஸ்திரேலியாவிற்கு 160 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
161 ஓட்டங்கள் எடுத்து வெற்றி
அதன்படி களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
Pic: Getty Images
அதிகபட்சமாக மார்னஸ் லபுஷேன் (Marnus Labuschagne) 37 (40) ஓட்டங்கள் எடுத்தார். இங்கிலாந்து அணியின் தரப்பில் ஜோஷ் டங் (Josh Tongue) 3 விக்கெட்டுகளும், வில் ஜேக்ஸ் (Will Jacks) 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலிய அணி தொடரை 4-1 என கைப்பற்றியது. டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருதும், மிட்செல் ஸ்டார்க் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.
Pic: Getty Images
Pic: Getty Images
Pic: Getty Images
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |