மகளிர் உலகக்கிண்ணம் 2026: நெதர்லாந்தை நொறுக்கிய அவுஸ்திரேலிய அணி
அவுஸ்திரேலிய மகளிர் அணி 98 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது.
மூனே, கார்டனர் விளாசல்
நெதர்லாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மகளிர் உலகக்கிண்ணப் போட்டி தி ரோஸ் பௌல் மைதானத்தில் நடந்தது.
முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 219 ஓட்டங்கள் குவித்தது.

பெத் மூனே 74 (42) ஓட்டங்களும், அஷ்லேய்க் கார்டனர் 58 (32) ஓட்டங்களும், ஜார்ஜியா வாரெம் 41 (18) ஓட்டங்களும் விளாசினர்.
98 ஓட்டங்கள் வித்தியாசத்தில்
பின்னர் ஆடிய நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 121 ஓட்டங்கள் மட்டுமே எடுத்ததால், அவுஸ்திரேலியா 98 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக பாபெட்டே டி லீட் 56 ஓட்டங்களும், ஸ்ட்ரெ காலிஸ் 44 ஓட்டங்களும் எடுத்தனர். கிம் கார்த் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
42 பந்துகளில் 74 ஓட்டங்கள் விளாசிய பெத் மூனே (Beth Mooney) ஆட்டநாயகி விருது பெற்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |