இங்கிலாந்தை சுருட்டி 7வது முறையாக உலக கோப்பையை வென்று வரலாறு படைத்தது அவுஸ்திரேலியா!
நியூசிலாந்தில் நடந்து மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி 7வது முறையாக அவுஸ்திரேலிய உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது.
நியூசிலாந்தில் மார்ச் 4ம் திகதி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கின.
இந்தத் தொடரில், இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்றன.
அரையிறுதி சுற்று முடிவில் இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றன.
அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக பிரபல நாட்டில் வெகுண்டெழுந்து இலங்கையர்கள் மாபெரும் போராட்டம்!
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 3) Christchurch மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன் படி, முதலில் களமிறங்கி பேட்டிங் செய்த அவுஸ்திரேலிய மகளிர் அணி, 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் குவித்தது.
அவுஸ்திரேலிய தரப்பில் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் Healy 170 ரன்கள் குவித்தார்.
இங்கிலாந்து தரப்பில் பந்து வீச்சில் Shrubsole 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
357 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணி, மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்து 43.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 285 ரன்களுக்கு சுருண்டு தோல்வியை தழுவியது.
148 not out ?
— ICC Cricket World Cup (@cricketworldcup) April 3, 2022
Take a bow, Nat Sciver!#CWC22 pic.twitter.com/OLgsy4LE5Z
இங்கிலாந்து தரப்பில் Natalie Schiver இறுதிவரை ஆட்டமிழக்காமல் 148 ரன்கள் குவித்தார். அவுஸ்திரேலிய தரப்பில் பந்துவீச்சில் Alana King, Jess Jonassen தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
The winning moment ?#CWC22 pic.twitter.com/jTVgX8pF8o
— ICC Cricket World Cup (@cricketworldcup) April 3, 2022
இங்கிலாந்தை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய அவுஸ்திரேலிய அணி, 7வது முறையாக உலக சாம்பியனாக முடி சூடி வரலாறு படைத்துள்ளது.
இதுவரை 12 முறை நடைபெற்றுள்ள ODI மகளிர் உலகக் கோப்பை தொடரில் அவுஸ்திரேலிய அதிகபட்சமாக 7 முறை கோப்பை வென்று வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
? Player of the Match of #T20WorldCup 2020 Final
— ICC Cricket World Cup (@cricketworldcup) April 3, 2022
? Player of the Match of #CWC22 Final
Champion, @ahealy77 ? pic.twitter.com/TxvRbbffDy
அவுஸ்திரேலியாவை தொடர்ந்து இங்கிலாந்து 4 முறையும், நியூசிலாந்து ஒரு முறையும் உலகக் கோப்பை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.