அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக பிரபல நாட்டில் இலங்கையர்கள் மாபெரும் போராட்டம்!
அவுஸ்திரேலியாவில் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது.
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலே இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளதை அடுத்து, நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இதையடுத்து, நாடு முழுவதும் போராட்டங்களை நடத்த ஆரம்பித்த மக்கள், கடந்த 31ம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருந்தனர்.
இதனிடையே, ஏப்ரல் 2 மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை ஏப்ரல் 4 அதிகாலை 6 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக அரசாங்கம் அறிவித்தது.
அதுமட்மின்றி, ஏப்ரல் 2ம் திகதி இரவு முதல் இலங்கையில் சமூகவலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏவுகணை மழை பொழிந்த ரஷ்யா.. கொளுந்துவிட்டு எரியும் உக்ரைன் நகரம்! வீடியோ ஆதாரம்
#SriLanka - protests against @GotabayaR Gov in Melbourne #Australia pic.twitter.com/nXj7m39Orj
— Amantha (@AmanthaP) April 3, 2022
இந்நிலையில், அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் திரண்ட இலங்கையர்கள், இலங்கை அரசாங்கம் மற்றும் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
கையில் பதாகைகள் மற்றும் இலங்கை கொடியுடன் கூடிய நூற்றுக்கணக்கான இலங்கையர்கள், கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பதவி விலக வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.