ஏவுகணை மழை பொழிந்த ரஷ்யா.. கொளுந்துவிட்டு எரியும் உக்ரைன் நகரம்! வீடியோ ஆதாரம்
உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான Odesa மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் Odesa நகரம் மீது ரஷ்ய போர் விமானங்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைனின் தெற்கில் உள்ள Odesa நகரில் உள்ள முக்கிய துறைமுகம் மீதும் ரஷ்ய ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
துறைமுகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதை Odesa நகர கவுன்சில் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், நகரின் முக்கிய உள்கட்டமைப்பு வசதி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நம்பமுடியாத வகையில் அடி கொடுத்த உக்ரைன்! 18000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக அறிவிப்பு
இந்த தாக்குதலில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என உக்ரேனிய ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
Photos of the aftermath of the strike in Odesa. 2/https://t.co/BskZcJLZPs pic.twitter.com/ID1yoJxOWr
— Rob Lee (@RALee85) April 3, 2022
எனினும், ரஷ்ய நடத்திய தாக்குதலில் நகரில் பல்வேறு இடங்களில் தீ பற்றி எரிந்து வருவதாக அவர் கூறினார்.
இதனிடையே, ரஷ்ய ஏவிய சில ஏவுகணைகள் வான்பாதுகாப்பு அமைப்பால் தடுத்து அழிக்கப்பட்டதாக உக்ரேனிய ஆலோசகர் தெரிவித்துள்ளார்.