ஆஷஸ் தொடரை கைப்பற்றிய அவுஸ்திரேலியா - இங்கிலாந்தை துரத்தும் சோகம்
3வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று ஆஷஸ் தொடரை 3-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது.
3வது ஆஷஸ் டெஸ்ட்
இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு இடையேயான ஆஷஸ் தொடரின் 3வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி, துடுப்பாட்டத்தை தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் 371 ஓட்டங்களை குவித்தது.
அவுஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக, விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேர்ரி 106 ஓட்டங்களும், உஸ்மான் கவாஜா 82 ஓட்டங்களும் குவித்தனர்.

இங்கிலாந்து தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

இதனை தொடர்ந்து, தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி, 286 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் 86 ஓட்டங்கள் குவித்திருந்தார்.

அதையடுத்து தனது 2வது இன்னிங்ஸை ஆடிய அவுஸ்திரேலிய அணி, 349 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக, விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேர்ரி 72 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.
435 என்று வெற்றி இலக்குடன் தனது 2வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, 352 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம், அவுஸ்திரேலியா அணி 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்தை துரத்தும் சோகம்
ஏற்கனவே முதல் 2 போட்டிகளில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

அவுஸ்திரேலிய மண்ணில் கடைசியாக விளையாடிய 18 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் கூட இங்கிலாந்து அணி வெற்றி பெறவில்லை.

இரு டெஸ்ட் போட்டிகளை டிரா செய்த இங்கிலாந்து அணி, மீதமுள்ள 16 டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி அடைந்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |