அவுஸ்திரேலியாவில் காணாமல் போன 4 வயது சிறுவன்: நிறுத்தப்பட்ட தேடுதல் வேட்டை
அவுஸ்திரேலியாவில் காணாமல் போன 4 வயது சிறுவன் தொடர்பான தேடல் வேட்டை நிறுத்தப்படுவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
காணாமல் போன 4 வயது சிறுவன்
அவுஸ்திரேலியாவில் 3 வாரங்களுக்கு முன்னதாக கஸ் லமண்ட்(Gus Lamont) என்ற 4 வயது சிறுவன் நாட்டின் உட்புற பகுதியில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டார்.
அறிக்கைகளின் படி, காணாமல் போன சிறுவன் அடிலெய்டில் இருந்து சுமார் 300 கி மீ தொலைவில் உள்ள யுண்டா பகுதிக்கு அருகே உள்ள விவசாய பண்ணையில் அமைந்துள்ள அவரது வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளார்.
அவர் கடைசியாக செப்டம்பர் 27ம் திகதி பார்க்கப்பட்டுள்ளார். சிறுவனின் பாட்டி அவரை அரை மணி நேரம் தனியாக விட்டுவிட்டு சென்றிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
மீட்பு மற்றும் தேடுதல் பணி நிறைவு
சிறுவனை கண்டுபிடிக்க பொலிஸார், இராணுவ வீரர்கள் மற்றும் வான்வழித் தேடல்களும் மூடுக்கி விடப்பட்டு இருந்தது.
சிறுவன் காணாமல் போன சம்பவத்தில் சந்தேகத்திற்குரிய செயல்கள் எதுவும் இல்லை என்றும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தி இருந்தனர்.
இந்நிலையில் காணாமல் போன 4 வயது சிறுவனை தேடும் பணி முடிவுக்கு வந்து இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் எதிர்காலத்தில் மேலும் சில சொத்துக்களில் தேடல் வேட்டை நடத்தப்படும் என்பதையும் அதிகாரிகள் புறக்கணிக்கவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |