போதைப்பொருள் வழக்கில் சிக்கிய முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்: குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு!
அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் மெக்கில் போதைப்பொருள் விநியோக வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் குற்றச்சாட்டில் முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் மெக்கில், சிட்னியில் சட்டவிரோத போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாக நியூ சவுத் வேல்ஸ் மாவட்ட நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
54 வயதான ஸ்டூவர்ட் மெக்கில், போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாக விசாரணையில் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
விசாரணையின் போது 330,000 அவுஸ்திரேலிய டொலர்கள் மதிப்புள்ள கோகைன் பரிமாற்றம் பற்றிய விவரங்கள் வெளிவந்துள்ளன.
மெக்கில் நேரடியாக போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபடவில்லை என்றாலும், அதன் விநியோகத்தில் தெரிந்தே பங்கேற்றதற்காக குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.
குற்றத்தை ஒப்புக் கொண்ட ஸ்டூவர்ட் மெக்கில்
விசாரணையில் ஸ்டூவர்ட் மெக்கில் கோகைன் போதைப் பொருளை பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டார்.
அத்துடன் தனது கூட்டாளியின் சகோதரர் மரினோ சொடிரோபெளலோஸை போதைப்பொருள் விற்பனையாளரான 'நபர் A' க்கு அறிமுகப்படுத்தியதையும் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதையடுத்து அவருக்கு மே மாதம் தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரியவந்துள்ளது.
As his career coincided with Shane Warne's, he played in lesser Tests
— North Stand Gang - Wankhede (@NorthStandGang) February 25, 2025
In that time he was successful though, & was the 2nd-highest wkt-taker in 2003, with 57 wkts
In the SCG Test of the 1999 Ashes he took his best haul-12-107 (🎥:⬇️)#HBD Stuart MacGillpic.twitter.com/FqOH5pmZv9
ஸ்டூவர்ட் மெக்கில் பின்னணி
ஸ்டூவர்ட் மெக்கில் 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 208 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
1988 முதல் 2008 வரை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய மெக்கில், பிரபல அவுஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீரர் ஷேன் வார்னுடன் ஒப்பிடப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |