9 மாதங்களில் 62 கிலோவை இப்படி குறைத்தேன்: போராட்டத்தை எதிர்கொண்ட அவுஸ்திரேலிய இளம் பெண்
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இளம்பெண் தனது அதீத உடல் எடையை குறைத்தது எப்படி என வெளிப்படுத்தியுள்ளார்.
எல்லி பாக்ஸ்டர்
பிரிஸ்பேன் நகரைச் சேர்ந்த இளம் பெண் எல்லி பாக்ஸ்டர். இவர் அதீத உடல் எடையை பதின்பருவத்திலேயே கொண்டிருந்தார். வளர்ந்து வரும் உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட இவர், 10 வயதில் இருந்தே எட்டு இடுப்பு அறுவை சிகிச்சைகளை தாங்கினார்.
இவ்வாறாக தொடர்ந்து மருத்துவமனையில் இருந்ததும், அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டதுமாக இருந்ததால் எல்லியினால் உடற்பயிற்சி என்பதை செய்ய முடியவில்லை.
Supplied
17 வயதில் அதீத உடல் எடை
இதன் காரணமாக அவர் 17 வயதில் 142 கிலோ உடல் எடையை எட்டினார். இதனால் விரக்தி அடைந்த எல்லி, தன்னுடைய 18வது பிறந்தநாள் வருவதற்குள் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.
அதனைத் தொடர்ந்து பெற்றோரின் ஆதரவுடன் Gastric sleeve weight loss செயல்முறையை மேற்கொண்டார் எல்லி. இந்த செயல்முறையில் உடல் எடை குறையத் தொடங்கினாலும் பல சவால்களை எல்லி எதிர்கொண்டார்.
Supplied
அறுவை சிகிச்சை
முதலில் அதற்கான அறுவை சிகிச்சையை செய்ய விரும்பும் மருத்துவரைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் இருந்துள்ளது. இறுதியில் எல்லியை ஆதரிக்க மருத்துவர் கிடைத்தார்.
அறுவை சிகிச்சைக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு அவர் அதற்கு முந்தைய உணவைப் பின்பற்ற வேண்டியிருந்தது. முதல் 15 நாட்களில் எல்லி 7 கிலோ குறைந்து அறுவை சிகிச்சைக்கு தயாராகி இருந்தார்.
ஒருவழியாக அறுவை சிகிச்சை முடிந்தது. ஆனால் அவர் ஒரு சிப் தண்ணீரை பருகவே கஷ்டப்பட்டுள்ளார். எனினும் straw மூலம் உணவுகளை எடுத்துக் கொண்டார். உடல் எடை குறைப்பு மூன்று மாதங்களுக்கு பின்னர் தான் எல்லியால் சாதாரண உணவுகளை உட்கொள்ள முடிந்தது.
Supplied
சில உணவுகள் அவரை நன்றாக இருப்பதாக உணர வைத்துள்ளது மற்றும் 30 கிலோ எடையைக் குறைத்தது. எல்லிக்கு அறுவை சிகிச்சை முடிந்து 9 மாதங்களுக்கு பின் 2021யில், தனது 18வது வயதில் 80 கிலோ எடையை எட்டினார்.
அதாவது அவர் 142 கிலோ உடல் எடையில் இருந்து 62 கிலோவை ஒன்பது மாதங்களில் குறைத்திருக்கிறார்.
ஆரோக்கியத்தை பராமரிக்கும் எல்லி
தற்போது ஒரு நாளைக்கு மூன்று புரோட்டீன் நிறைந்த உணவுகளை கடைபிடிப்பதன் மூலம் தனது உடலை ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் எல்லி பராமரித்து வருகிறார்.
எல்லி பாக்ஸ்டர் உடல் எடை மாற்றம் குறித்து கூறுகையில், 'நான் அழகியலில் கவனம் செலுத்தாமல், பொதுவாக ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த விரும்புகிறேன். அது எனக்கு பெரிய விடயமாக இருந்தது.
என் வாழ்க்கையில் இருக்க விரும்பும் மற்றும் என்னை நேசிக்க விரும்பும் நபர்கள், நான் ஆரோக்கியமாக இருப்பதைப் பற்றியும், நான் செய்ய விரும்பும் விடயங்களை செய்ய முடியும் என்பதில் அவர்கள் அக்கறை காட்டுவதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |