திடீர் மரணமடைந்த இலங்கை பிரபலம்! அனுதாபம் தெரிவித்த அவுஸ்திரேலியா அமைச்சர்
பிரபல இலங்கை சிங்கள மொழிப் பாடகர் சுனில் பெரேரா உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், அவரது மறைவுக்கு அவுஸ்திரேலியா அமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஜிப்ஸி இசைக்குழுவின் தலைவரும் சிங்கள இசைக்கலைஞருமான சுனில் பெரேரா, உடல் நலக் குறைவு காரணமாக, கொழும்புவில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், திடீரென்று இன்று உயிரிழந்தார். இவரது மறைவு குறித்து கேள்விப்பட்ட அவுஸ்திரேலியாவின் சுங்க, சமூக பாதுகாப்பு மற்றும் பன்முக கலாச்சார விவகாரங்களுக்கான உதவி அமைச்சர் Jason Wood, தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
ABC News: Tom Hancock
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புகழ்பெற்ற ஜிப்ஸி இசைக்குழுவின் தலைவரான சுனில் பெரேரா 69 வயதில் காலமானார். அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.
மேலும், ஒவ்வொரு முறை அவர் அவுஸ்திரேலியாவிற்கு இசை நிகழ்ச்சிக்காக வரும் போது, கூட்டம் நிரம்பி வழியும். அவர் இலங்கை இசைக்கு அளித்த பங்களிப்பும், அவுஸ்திரேலியா இலங்கை சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கத்திற்கும் நன்றி.
அவுஸ்திரேலியா இலங்கை சமூகத்திற்கு சுனில் பெரேராவின் முக்கியத்துவத்தை நான் அறிவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.