பயிற்சியின் போது கடலில் விழுந்த அவுஸ்திரேலிய ஹெலிகாப்டர்: 4 வீரர்கள் மாயம்
அவுஸ்திரேலியாவில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று பயிற்சியின் போது வடகிழக்கு கடற்கரை பகுதி தண்ணீரில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 வீரர்கள் காணாமல் போய் இருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
விபத்திற்குள்ளான ஹெலிகாப்டர்
குயின்ஸ்லாந்தின் ஹாமில்டன் தீவுக்கு அருகில் உள்ள துணை வெப்பமண்டல கடல் நீரில் அவுஸ்திரேலிய ராணுவத்தின் MRH-90 தைப்பான் ரக ஹெலிகாப்டர் வெள்ளிக்கிழமை இரவு விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஹெலிகாப்டர் தீவிரமாக நடைபெற்ற வந்த தாலிஸ்மேன் சேபர் ராணுவ பயிற்சியின் போது விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலும் இந்த விபத்தை தொடர்ந்து, ஹெலிகாப்டரில் இருந்த அவுஸ்திரேலியாவின் 4 விமானப்படை வீரர்கள் காணாமல் போகி இருப்பதாக அந்நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ்(Richard Marles) சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
12 மணி நேர தேடுதல் வேட்டை பிறகும் அவர்கள் குறித்த தகவல் தெரியவில்லை, இருப்பினும் தேடுதல் பணியானது சனிக்கிழமையும் தொடரும் என்றும் மார்லஸ் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் காணாமல் போன வீரர்களின் குடும்பங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களுக்கு தேவையான ஆதரவை சிறப்பு அதிகாரிகள் வழங்கி வருகின்றனர், அடுத்து வரும் நேரங்களில் நல்ல செய்தி கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
ராணுவ பயிற்சி
இதற்கிடையில் ஜப்பான், பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் பங்கேற்ற தாலிஸ்மேன் சேபர் ராணுவ பயிற்சியை நிறுத்தி வைப்பதாக பாதுகாப்பு துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
போர் பயிற்சியானது இரண்டாவது வாரத்தில் நுழைந்து இருந்த நிலையில், போர் பயிற்சியின் போது பெரிய அளவிலான தந்திரோபாயங்கள், தரைவழி தாக்குதல், நீர்நிலை தரையிரங்கம் மற்றும் விமான செயல்பாடுகள் போன்றவற்றை ஆராய திட்டமிடப்பட்டு இருந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |