நடு வானில் நெருப்பு கோளமான சுற்றுலா ஹெலிகொப்டர்... பலர் உடல் கருகி மரணம்
ரஷ்யாவின் பெலுகா மலைப்பகுதியில் சுற்றுலா ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகி, நெருப்பு கோளமாக வெடித்துச் சிதறியதில் 10 பேர்கள் வரையில் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
13 பயணிகளுடன் பெலுகா மலையில்
தொடர்புடைய விமானமானது 13 பயணிகளுடன் பெலுகா மலைப்பகுதியில் சுற்றுலா சென்றுள்ளது. ஆனால் திடீரென்று அந்த ஹெலிகொப்டரானது நெருப்பு கோளமாக தரையில் பதித்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
@East2west news
முதற்கட்ட விசாரணையில், Tyungur கிராமத்தில் தரையிறங்கும் நிலையில் அந்த Mi-8 ஹெலிகொப்டரானது மின் கம்பியில் உரசியதாகவும், இதில் சிக்கிக்கொண்டு, தீ கோளமாக வெடித்ததாகவும் கூறுகின்றனர்.
தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த மருத்துவ உதவிக்குழுவினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்க போராடினர். ஆரம்பத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆறு பேர் என்று கருதப்பட்டது, ஆனால் அதன் பின்னர் மேலும் நான்கு இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன, மேலும் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது.
பயணிகளில் 8 பேர் பெண்கள்
இதனிடையே, சிலர் காயங்களுடன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களின் நிலை தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை.
@East2west news
சடலங்களை அடையாளம் காணும் பணி இன்னும் துவங்காத நிலையில், அந்த ஹெலிகொப்டரில் பயணித்தவர்களில் 8 பேர் பெண்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
13 சுற்றுலா பயணிகளுடன், 3 விமானிகளும் அந்த ஹெலிகொப்டரில் பயணித்துள்ளனர். தெற்கு சைபீரியாவின் Altai மலைப்பகுதியில் பெலுகா மலை மிக உயரமான சிகரம் என கூறுகின்றனர். இதன் உயரமானது 4,506 மீற்றர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |