தங்களை வீழ்த்திய வங்கதேச அணியை கை தட்டி பாராட்டிய ஆஸ்திரேலியா வீரர்கள்! கமெராவில் பதிவான புகைப்படம்
வங்கதேச அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில், அவுஸ்திரேலியா அணி தோல்வியடைந்த போதும், அந்தணியை பாராட்டியது பலரது மனங்களை வென்றுள்ளது.
அவுஸ்திரேலியா அணி, வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி நேற்று டாக்காவில் நடைபெற்றது.
ஏனெனில், டி20 தொடரில் வங்கதேச அணி, அவுஸ்திரேலியாவை வென்றதில்லை, இதுவே முதல் முறை என்பதால், வங்கதேச ரசிகர்களும் தங்கள் நாட்டு வீரர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் போட்டி முடிந்து வங்கதேச அணி வீரர்கள் திரும்பிய போது, மைதானத்தின் உள்ளே வந்த அவுஸ்திரேலியா வீரர்கள், அவர்களின் இந்த வெற்றியை கை தட்டி பாராட்டினர்.
இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.