பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்..ஐபிஎல்லில் தொடரும் அவுஸ்திரேலிய வீரர்கள்?
அவுஸ்திரேலிய வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர் இருந்தாலும், ஐபிஎல் ஒப்பந்தத்தில் தொடர்வார்கள் என்று கிரிக்கெட் அவுஸ்திரேலியா உறுதிப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் செல்லும் அவுஸ்திரேலிய அணி
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.
மே 30ஆம் திகதி முதல் போட்டி நடைபெற உள்ளதால், மே 23ஆம் திகதியே அவுஸ்திரேலிய அணி பாகிஸ்தானின் இஸ்லாபாத் சென்றடையத் திட்டமிடப்பட்டுள்ளது. இது ஐபிஎல் தொடரின் இறுதிக்கட்டத்துடன் ஒரே நேரத்தில் அமைகிறது.
எனவே, ஐபிஎல் தொடரில் விளையாடும் அவுஸ்திரேலிய வீரர்கள் பாதியிலேயே பாகிஸ்தானுக்கு செல்வார்களா என்ற கேள்வி எழுந்தது.
ஒப்பந்தக் கடமைகளை நிறைவேற்ற அனுமதி
இந்நிலையில், இந்தியன் பிரீமியர் லீக் ஒப்பந்தக் கடமைகளை நிறைவேற்ற அனுமதிக்கப்படுவார்கள் என்று கிரிக்கெட் அவுஸ்திரேலியா உறுதிப்படுத்தியுள்ளது.

இதன்மூலம், மே 30ஆம் திகதி அன்று தொடங்கும் ஒருநாள் தொடரில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
எங்கள் அணியில் இடம்பெற்றுள்ள அவுஸ்திரேலிய வீரர்கள், ஐபிஎல் தொடருக்காக இங்கேயே தங்கியிருப்பார்கள் என்ற தகவல் எங்களுக்குக் கிடைத்துள்ளது என்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியைச் சேர்ந்த ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |