அவுஸ்திரேலியா குடியரசு நாடாக வேண்டுமா? பிரித்தானிய மன்னர் சார்லஸின் உறுதியான கருத்து
அவுஸ்திரேலியா குடியரசு நாடாக வேண்டுமா என்பதை அந்நாட்டு மக்களே முடிவெடுப்பார் என்று பிரித்தானிய மன்னர் 3 ம் சார்லஸ் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மன்னரின் அவுஸ்திரேலிய பயணம்
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமீலா இருவரும் அடுத்த வாரம் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
அப்போது சிட்னி மற்றும் கான்பெராவில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போது அவுஸ்திரேலியாவில் மன்னரின் முடியாட்சியின் எதிர்காலம் குறித்த விவகாரங்கள் ஒரு பிரச்சனையாக ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மன்னரின் வருகைக்கு முன்னதாக மன்னரின் சார்பாக பக்கிங்ஹாம் அரண்மனையும், அவுஸ்திரேலிய குடியரசு இயக்கமும் கடிதங்களை பரிமாறிக் கொண்டுள்ளனர்.
அவுஸ்திரேலிய மக்களின் முடிவு
அரண்மனையில் இருந்து வரும் கடிதங்கள் டெய்லி மெயிலில் வெளியான நிலையில், அந்த கடிதத்தில். அவுஸ்திரேலியா மன்னரின் முடியாட்சிக்கு கீழ் இருக்க வேண்டுமா அல்லது சுதந்திரமான குடியரசு நாடாக வேண்டுமா என்பதை அவுஸ்திரேலிய மக்கள் முடிவு செய்ய வேண்டிய காரியம் என்று மன்னர் உறுதிப்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியில் பக்கிங்ஹாம் அரண்மனை கடிதத்தின் உள்ளடக்கங்கள் கூடுதலாக எதுவும் வழங்கப்படவில்லை.
இருப்பினும், இந்த செய்தி மன்னரின் வருகைக்கு முன்னதாக அவுஸ்திரேலியாவில் குடியரசுக்காக பிரச்சாரம் செய்யும் குழுவின் சந்திப்பிற்கு முன்னதாக இது இணக்கமான பரிமாற்றமாக பார்க்கப்படுகிறது.