பிரெஞ்சு கடல் பகுதியில் நீந்திக்கொண்டிருந்த சுற்றுலாப்பயணி: மக்கள் கண் முன்னே நிகழ்ந்த பயங்கரம்
பிரெஞ்சுக் கடல் பகுதியில் நீந்திக்கொண்டிருந்த சுற்றுலாப்பயணி ஒருவரை, மக்கள் கண் முன்னே சுறா ஒன்று துவம்சம் செய்த பயங்கர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
மக்கள் கண் முன்னே சுற்றுலாப்பயணியை கடித்துக் குதறிய சுறா
நேற்று முன்தினம், பிரான்சுக்கு சொந்தமான New Caledonia பகுதியில் சுற்றுலாப்பயணி ஒருவர் நீந்திக்கொண்டிருந்துள்ளார்.
59 வயதான அவர், அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்தவராவார். தனியாக சுற்றுலா வந்திருந்த அவரை சுறா ஒன்று கடித்துக் குதறியது.
இந்த பயங்கர சம்பவத்தைப் பார்த்த மக்கள் பயந்து அலற, மீட்புக் குழுவினர் உடனடியாக படகில் விரைந்து, அவரை கரைக்குக் கொண்டுவந்து அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளித்தனர்.
image - 9News
ஆம்புலன்ஸ் ஒன்று சம்பவ இடத்துக்கு வந்த நிலையிலும், அவர் அங்கேயே உயிரிழந்துவிட்டார்.
அவரைத் தாக்கியது புலிச் சுறா என்னும் நான்கு மீற்றர் நீள சுறாமீன் என கருதப்படுகிறது. உயிரிழந்த சுற்றுலாப்பயணியின் உறவினர்களுக்கு அவரது மரணம் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
image - 9News