அவுஸ்திரேலிய இராணுவ வீரரின் அவதூறு வழக்கு தோல்வி: ஆப்கானில் 4 பேரை சட்டவிரோதமாக கொன்றதாக தீர்ப்பு
ஆப்கானிஸ்தானில் 4 பேரை சட்டவிரோதமாக கொன்றதாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து அவுஸ்திரேலியாவின் முன்னாள் போர் வீரர் மேல்முறையீடு செய்துள்ளார்.
அவதூறு வழக்கு
அவுஸ்திரேலியாவின் உயரடுக்கு சிறப்பு விமான சேவை பிரிவின் முன்னாள் ஓய்வு பெற்ற வீரரான பென் ராபர்ட்ஸ்-ஸ்மித்(Ben Roberts-Smith), ஒரு தசாப்தத்திற்கு முன்பு ஆப்கானிஸ்தானில் சேவையாற்றிய போது சட்டவிரோதமாக 6 பேரை கொன்றதாக அவுஸ்திரேலிய பத்திரிக்கை ஒன்று 2018 கட்டுரை வெளியிட்டு இருந்தது.
இதையடுத்து தன் மீது அவதூறு பரப்பும் விதமாக குற்றச்சாட்டுகள் இருப்பதாக தெரிவித்து பத்திரிக்கைக்கு எதிராக ஓய்வு பெற்ற இராணுவ வீரர் பென் ராபர்ட்ஸ்- ஸ்மித் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்றை பதிவு செய்தார்.
AP
அதனடிப்படையில் நடைபெற்ற நீதிமன்ற விசாரணையின் முடிவில், ஜூன் 1 திகதி பத்திரிக்கையின் குற்றச்சாட்டுகள் போலியானது இல்லை என்று தெரிவித்ததுடன், பென் ராபர்ட்ஸ்- ஸ்மித்தின் அவதூறு வழக்கு தோல்வியடைந்ததாக நீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்துடன் கூறப்பட்ட 6 சட்டவிரோதமான கொலைகளில் 4க்கு பென் ராபர்ட்ஸ்- ஸ்மித் தான் காரணம் என்றும் நீதிபதிகள் கண்டறிந்தனர்.
இந்நிலையில் பென் ராபர்ட்ஸ்- ஸ்மித் தற்போது போர் குற்றங்கள் தொடர்பான குற்றவியல் வழக்கின் கீழ் அவுஸ்திரேலிய பொலிஸாரின் விசாரணையில் உள்ளார்.
நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு
அவதூறு வழக்கு தொடர்பாக வெளியான சிவில் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து ஓய்வு பெற்ற இராணுவ வீரர் பென் ராபர்ட்ஸ்- ஸ்மித் தற்போது மேல்முறையீடு செய்துள்ளார்.
Reuters
44 வயதான முன்னாள் இராணுவ வீரரின் மேல்முறையீட்டு மனுவை பெடரல் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. துணிச்சலுக்கான மிக உயர்ந்த விருதான அவுஸ்திரேலிய விக்டோரியா கிராஸ்-யை பெறுவதற்கு அழைப்பு விடுத்தவர்களில் பென் ராபர்ட்ஸ்- ஸ்மித்தும் ஒருவர்.
2006ல் ஆப்கானிஸ்தானில் ரோந்து மற்றும் சிறந்த துப்பாக்கி சூடு வீரராக இருந்ததற்காக பென் ராபர்ட்ஸ்-ஸ்மித்-துக்கு கேலண்ட்ரிக்கான பதக்கம் வழங்கப்பட்டது.
பென் ராபர்ட்ஸ்-ஸ்மித் தொடர்ந்த வழக்கு தோல்வியை சந்தித்து இருக்கும் நிலையில், செய்தி நிறுவனத்தின் சட்ட செலவுகளை செலுத்த பென் ராபர்ட்ஸ்-ஸ்மித் ஒப்புக் கொண்டுள்ளார். இது 35 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை தாண்டக்கூடும் என்று கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |