அவுஸ்திரேலிய வரலாற்றில் முதல்முறை..! மத்திய வங்கியின் முதல் பெண் தலைவராக மைக்கேல் புல்லக் நியமனம்
அவுஸ்திரேலிய வரலாற்றில் முதல் முறையாக மைக்கேல் புல்லக் என்ற பெண் அடுத்த 7 ஆண்டுகளுக்கு மத்திய வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய வங்கியின் தலைவராக மைக்கேல் புல்லக் நியமனம்
அவுஸ்திரேலியாவின் வரலாற்றில் முதல் முறையாக மத்திய வங்கியின் தலைவராக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ரிசர்வ் பேங்க் ஆப் அவுஸ்திரேலியாவின் கவர்னர் பிலிப் லோவ்-வின துணை பொறுப்பாளராக செயல்பட்டு வந்த மைக்கேல் புல்லக்(Michele Bullock) அடுத்த 7 ஆண்டுகளுக்கு ரிசர்வ் பேங்க் ஆப் அவுஸ்திரேலியாவின் தலைவராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Reuters
இது தொடர்பான அறிவிப்பை அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி மற்றும் பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
புதிய தலைவராக மைக்கேல் புல்லக்கின் நியமனத்தின் முக்கியத்துவத்தை அவுஸ்திரேலிய பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் விளக்கினார், அத்துடன் அவுஸ்திரேலிய மத்திய வங்கியை வழிநடத்தும் முதல் பெண்மணி மைக்கேல் புல்லக் என்றும் அறிவித்தார்.
லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸில் முதுகலை பட்டம் பெற்ற மைக்கேல் புல்லக் 1985ம் ஆண்டு ரிசர்வ் பேங்க் ஆப் அவுஸ்திரேலியாவில் சேர்ந்தார், இவர் சிறந்த ஆய்வாளராகவும் மதிக்கப்படுகிறார்.
Reuters
“சவாலான நேரத்தில் இந்த பொறுப்பு தன்னிடம் வழங்கப்பட்டு இருப்பதாகவும், ஆனால் திறமையான செயல் அதிகாரிகளால் நான் ஆதரிக்கப்படுவேன்" என்று புல்லக் தன்னுடைய நியமனம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
43 ஆண்டு கால வாழ்க்கைக்கு முற்று
அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட வட்டி விகித அதிகரிப்பு தொடர்பாக பொதுமக்களின் பின்னடைவுக்கு பிறகு, தற்போதைய (RBA)கவர்னர் பிலிப் லோவ்-வை மீண்டும் தலைவராக நியமிக்க வேண்டாம் என்ற முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
DAN PELED
இதன்மூலம் வரும் செப்டம்பர் 17ம் திகதி முதல் மத்திய வங்கியில் தன்னுடைய 43 ஆண்டு கால வாழ்க்கையை பிலிப் லோவ் நிறைவு செய்ய உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |