அவுஸ்திரேலியாவில் கங்காருவுடன் சண்டையிட்ட சுற்றுலா பயணி: வனவிலங்கு ஆர்வலர்கள் கண்டனம்
அவுஸ்திரேலியாவின் உயிரியல் பூங்கா ஒன்றில் உள்ள கங்காருவுடன் சுற்றுப்பயணி ஒருவர் மோதிக் கொள்ளும் காட்சிகள் இணையத்தில் பரவி பேசு பொருளாக மாறியுள்ளது.
கங்காருவுடன் சுற்றுப்பயணி மோதல்
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா செல்லும் அனைவருக்கும் இருக்கும் ஆசைகளில் ஒன்று கங்காரு உயிரினங்களை பார்த்து விட வேண்டும் என்பது தான்.
சுற்றுலா பயணிகளின் இந்த ஆர்வம் தான், கங்காருகளை மிக அருகில் பார்த்து மகிழும் வகையிலான உயிரியல் பூங்காக்கள் நாடு முழுவதும் பெருக முக்கிய காரணம்.
அந்த வகையில் சமீபத்தில் பெர்த் உயிரியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் ஒருவர் கங்காரு உடன் மோதிக் கொள்ளும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் உயிரியல் பூங்காவில் உள்ள கங்காரு ஒன்று பெண் ஒருவரின் மிக அருகில் வருகிறது. உடனடியாக அங்கிருந்து அந்த பெண் விலகிச் செல்லவே, அந்த கங்காரும் அந்த பெண்ணை பின் தொடர்ந்து வர தொடங்குகிறது. இதையடுத்து அங்கிருந்த ஆண் சுற்றுலா பயணி ஒருவர் கங்காருக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே புகுந்து கங்காரு உடன் மோதிக் கொண்டு சண்டையிடுகிறார்.
இது தொடர்பான வீடியோ காட்சியை பிபிசி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
இணையவாசிகள் கருத்து
இந்த மோதல் தொடர்பாக இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் தெரிவித்த கருத்தில், பூங்காக்களுக்கு யாரும் செல்ல வேண்டாம், ஏனெனில் காட்டு விலங்குகளை பிடித்து வைப்பது அசிங்கமானது.
நீங்கள் பூங்காக்களுக்கு செல்வது என்பது விலங்குகளின் சித்தரவதைக்கு நிதியளிப்பது போன்றதாகும் என குறிப்பிட்டுள்ளார்.
bbc
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |