அரியவகை கால் வலி நோயால் குளிக்க முடியவில்லை!
அவுஸ்திரேலியாவில் 10 வயது சிறுமி அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு குளிக்க முடியாமலும், அதிக எரிச்சலாலும் அவதிப்பட்டு வருகிறார்.
அரியவகை கால் வலி
அவுஸ்திரேலியாவில் உள்ள 10 வயது பெல்லா மேசி என்ற சிறுமிக்கு உலகிலேயே அரியவகை நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவ துறையில் மனிதகுலம் அறிந்த மிகவும் வேதனையான நிலை என்று இந்த நோய் கூறப்படுகிறது.
சிறுமியின் வலது காலை இந்த நோய் தாக்கியுள்ளதால் அவருக்கு பலவீனமான நிலை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, மேலும், சிறுமி நகரும் போது அல்லது யாராவது அதைத் தொடும்போது கூட முழு வலது காலிலும் வலியை ஏற்படுத்தும்.
பெல்லா மேசியின் குடும்பம் விடுமுறையின் போது பிஜி நாட்டிற்கு சென்ற போது அவரது வலது காலில் ஒரு கொப்புளம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவருக்கு தொடர்ச்சியாக சோதனைகள் செய்யப்பட்ட பின்பு பிராந்திய வலி நோய்க்குறி (CRPS) இருப்பது கண்டறியப்பட்டது.
NYPost
என்னால் குளிக்க முடியாது என சிறுமி வேதனை
சிறுமிக்கு ஏற்பட்ட இந்த நோயானது தீவிர வலியை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. இந்த நோய் வந்த பிறகு, அவரது அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறுமி குழந்தைப் பருவத்தைத் திருடக்கூடிய கொடூரமான வலியுடன் போராடி வருகிறார்.
NYPost
பெல்லாவின் வலியால், அவரது வலது கால் மற்றும் இடுப்பு வரை இயக்கம் இழந்துவிட்டது. அவர், இப்போது படுக்கையில் இருக்கும் நிலை தான் உள்ளது. பெல்லா வீட்டில் சுற்றி வர வேண்டும் என்றால் சக்கர நாற்காலி உதவியுடன் வரும் நிலை தான் உள்ளது.
இதுகுறித்து பெல்லா மேசி கூறும்போது,"என்னால் குளிக்க முடியாது, நடக்க முடியாது, காலை எந்த இடத்திலும் தொடவும் முடியாது. அதிக எரிச்சலாக இருக்கும்" எனக் கூறினார்.
சிறுமிக்கு அமெரிக்காவில் சிகிச்சை
சிறிய காயங்கள் அல்லது அறுவை சிகிச்சைகளால் அடிக்கடி தூண்டப்படும் அரிய நிலை, இப்போது பெல்லாவின் வாழ்க்கையை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.
10 வயது சிறுமியால் அசையவோ, பாதிக்கப்பட்ட கால் மற்றும் பாதத்தின் தொடுதலையோ அல்லது உணர்வை சகித்துக்கொள்ளவோ, பள்ளிக்குச் செல்லவோ, நண்பர்களுடன் விளையாடவோ அல்லது பேன்ட் அணியவோ முடியவில்லை.
NYPost
பெல்லாவின் குடும்பத்தினர் அவுஸ்திரேலியாவில் உரிய நிவாரணம் கிடைக்காததால் அவர்கள் அமெரிக்க மருத்துவர்களை நாடினர். பெல்லாவும் அவரது தாயும் ஸ்பெரோ கிளினிக்கில் சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்காவிற்கு சென்றுள்ளனர்.
பெல்லாவின் தாயார், தனது மகளின் சிகிச்சைக்கான பணத்தை வழங்குவதற்காக GoFundMe பிரச்சாரத்தை ஏற்பாடு செய்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |