அறிவாற்றல் திறனை பாதிக்கும் அல்சைமர் நோய்: புதிய மருந்துக்கு அனுமதி வழங்கியுள்ள பிரபல நாடு
அறிவாற்றல் திறனை பாதிக்கும் அல்சைமர் நோய்க்கான புதிய மருந்திற்கு அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டாளர்கள் அனுமதி வழங்கியுள்ளனர்.
புதிய மருந்துக்கு அனுமதி
வயதான காலங்களில் அறிவாற்றல் திறனை பாதித்து ஞாபக திறனை பாதிக்கும் அல்சைமர் நோய்க்கான புதிய மருந்திற்கு வியாழக்கிழமை அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டாளர்கள் அனுமதி வழங்கியுள்ளனர்.
ஜப்பானின் ஈசாய்(Eisai) மற்றும் அமெரிக்காவின் பயோஜென்(Biogen) இணைந்து தயாரித்துள்ள லெகேம்பி(Leqembi) என்ற புதிய மருந்து தொடக்க நிலை அல்சைமர் பாதிப்புகளை தடுப்பதாக தெரிவிக்கப்பட்டது.
MGN
இருப்பினும் மூளை இரத்த கசிவு மற்றும் வீக்கம் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுவதாக ஆராய்ச்சி முடிவுகள் அக்கறை தெரிவித்து இருந்தனர்.
இந்த லெகேம்பி மருந்தை கடந்த ஜனவரி மாதமே அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி வழங்கி இருந்தது, ஆனால் இந்த அனுமதி 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்காக அரசு நடத்தும் மருத்துவ பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சரியாக கொண்டுவரப்படவில்லை.
இந்நிலையில் தொடர் சோதனைக்கு பிறகு வியாழக்கிழமை அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டாளர்கள் அல்சைமர் நோய்க்கான லெகேம்பி மருந்துக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.
AP
இதன்மூலம் அரசு நடத்தும் மருத்துவ காப்பீட்டின் கீழ் உள்ள பெரும்பாலான முதியவர்களுக்கு இந்த மருந்தானது கிடைக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக மெடிக்கேர் ஏஜென்சியின் நிர்வாகி Chiquita Brooks-LaSure வழங்கிய தகவலில், மருத்துவ காப்பீட்டின் கீழ் இந்த மருந்தை பெரும் அனைவரும் அதன் செலவில் 20% அல்லது 1000 டொலர்களை கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மருந்து செயல்படும் முறை
லேகேம்பி மருந்து lecanemab என்றும் அழைக்கப்படுகிறது, இந்த சிகிச்சை முறையானது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை முளைக்குள் செலுத்தப்படும் ஆன்டிபாடி சிகிச்சை முறையாகும்.
USA TODAY
இவை அமிலாய்டு பீட்டாவை குறைப்பதன் மூலம் தன்னுடைய செயல்பாட்டை காட்டுகிறது. இந்த மருந்தானது நோயை முழுமையாக குணப்படுத்தாது என்றாலும், கூடுதல் காலத்திற்கு நோயாளியின் நினைவாற்றல் திறனை தக்க வைக்க உதவும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் சுமார் 6.5 பேர் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய நிலையில் புதிய மருந்தின் அனுமதி அல்சைமர் நோயாளிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |