அமெரிக்கரின் பேச்சு, கருத்து சுதந்திரத்தை ஆதரிக்கிறோம்..வன்முறையை அல்ல! இந்திய தூதரகம் மீது தாக்குதலுக்கு கடும் கண்டனம்
அமெரிக்காவில் இந்திய துணைத் தூதரகத்தின் மீது தீவைக்க முயன்ற சம்பவத்திற்கு இந்திய Caucus கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்
சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். மேலும் தீவைக்கவும் முயன்றனர்.
கடந்த 5 மாதங்களில் இந்திய துணைத் தூதரகத்தின் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்திய இரண்டாவது தாக்குதல் இதுவாகும். சூலை 2ஆம் திகதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் வெளியிட்ட வீடியோவில், இந்திய துணைத் தூதரகத்தில் தீவைக்கும் செயல் காட்டப்பட்டது.
PTI
இந்திய Caucus கடும் கண்டனம்
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள இந்திய-அமெரிக்க பிரதிநிதி ரோ கண்ணா இந்த செயலை கடுமையாக கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'வன்முறையை பொறுத்துக்கொள்ள முடியாது' எனக் கூறி தனது கண்டனத்தை பதிவு செய்தார். அத்துடன் அவர், இந்திய தூதரகத்திற்கு எதிரான தாக்குதல் தொடர்பான விசாரணையை விரைவுப்படுத்தவும், சம்பந்தப்பட்டவர்களை பொறுப்பேற்கவும் அமெரிக்க வெளியுறவுத்துறையை வலியுறுத்தினார்.
மேலும், இந்திய Caucus கூறுகையில், 'இணைத் தலைவர்கள் என்ற முறையில், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் தீவைப்பு முயற்சி மற்றும் நாசவேலைகள், தூதர் சந்து உட்பட இந்திய தூதரக அதிகாரிகளை குறிவைத்து வன்முறை வாசகங்களுடன் சமூக ஊடகங்களில் பரவும் சுவரொட்டிகளை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்' என தெரிவித்துள்ளது.
அதேபோல், 'ஒவ்வொரு அமெரிக்கருக்கும் சுதந்திரமான பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமையை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால் அது சொத்துக்களை சேதப்படுத்தவோ அல்லது வன்முறையைத் தூண்டுவதற்கான உரிமம் அல்ல. தூதரகத்திற்கு எதிரான வன்முறை ஒரு கிரிமினல் குற்றமாகும். அது பொறுத்துக்கொள்ளப்படாது.
இந்திய துணைத் தூதரகத்தில் ஏற்பட்ட சேதம் குறித்த விசாரணையில் சட்ட அமலாக்க அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படவும், சம்பந்தப்பட்டவர்களை பொறுப்பேற்கவும் வெளியுறவுத்துறையை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்' என Caucus தனது அறிக்கையில் கூறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |