மதிய விருந்தில் விஷக் காளானை பரிமாறிய பெண்: தண்டனை அறிவித்த நீதிமன்றம்
அவுஸ்திரேலியாவில் விஷம் கலந்து காளானை உணவுடன் பகிர்ந்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உணவில் விஷம் கலந்த காளான்
கடந்த 2023ம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தின் லியோங்கதா நகரில் அமைந்துள்ள வீட்டில் எரின் பேட்டர்சன்(50) என்ற பெண், தனது முன்னாள் கணவரின் உறவினர்களுக்கு உணவில் விஷம் கலந்து காளானை பரிமாறிய வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ளார்.
2023ம் ஆண்டு ஜூலை 9 திகதி தனது முன்னாள் கணவரின் தந்தை, தாய் மற்றும் சில உறவினர்களை மதிய உணவிற்கு எரின் பேட்டர்சன் அழைத்துள்ளார்.
இந்த மதிய விருந்திற்கு பிறகு முன்னாள் மாமனார் டான் பேட்டர்சன்(70), மாமியார் கெய்ல் பேட்டர்சன்(70) மற்றும் கெய்லின் சகோதரி ஹீதர் வில்கின்சன்(66) ஆகிய மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதில் அதிர்ஷ்டவசமாக ஹீதரின் கணவர் ரெவரெண்ட் இயன் வில்கின்சன் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு உயிர்பிழைத்தார்.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் எரின் பேட்டர்சன், பீஃப் வெலிங்டன் என்ற மதிய உணவில் டெத் கேப்(Death Cap) என்ற கொடிய விஷ காளானை சேர்த்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆயுள் தண்டனை
இதனை தொடர்ந்து மெல்போர்ன் விக்டோரியா நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், எரின் பேட்டர்சன் உணவில் விஷம் கலந்த காளானை கலந்ததும், இதனை திட்டமிட்டே செய்ததும் தெரியவந்து இருப்பதாகவும், இது தொடர்பாக எரின் பேட்டர்சன் சிறிது கூட மன வருத்தம் கொண்டிருக்க வில்லை எனவும் நீதிபதி கிறிஸ்டோபர் பீல் தெரிவித்தார்.
இறுதியில், இரண்டு குழந்தைகளுக்கு தாயான எரின் பேட்டர்சனுக்கு குறைந்தது 33 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |