அவுஸ்திரேலியாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! பயங்கரவாத குழு என்று ஏன் அறிவிக்கவில்லை? எழும் கேள்வி
அவுஸ்திரேலியாவில் காவல்துறை அதிகாரிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து கேள்விகள் எழுந்துள்ளன.
காவல்துறை அதிகாரிகள் சுட்டுக்கொலை
மெல்போர்ன் நகருக்கு வடகிழக்கில் அமைத்துள்ள போர்பன்காவில் சமீபத்தில் காவல்துறை அதிகாரிகள் இருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்தியவர் டேசி ப்ரீமேன் என்று அடையாளம் காணப்பட்டதாக தகவல் வெளியானது.
இதனையடுத்து குற்றம்சாட்டப்படும் நபர் 'Sovereign Citizens' என்ற இயக்கத்தைச் சேர்ந்தவர் என்ற தகவலும் பரவியது.
இந்த இயக்கமானது அரசாங்கம் சட்டவிரோதமானது என்றும், சட்டம் என்பது தங்களுக்கு பொருந்தாது என்று நம்புகிறது.
கேள்விகளை எழுப்பும் அவுஸ்திரேலியர்கள்
இந்த நிலையில், பொலிஸார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் அவுஸ்திரேலியர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
Sovereign Citizens என்று அடையாளம் காணும் நபர்களை அரசு ஏன் பயங்கரவாதிகளாக வகைபடுத்தப்படவில்லை என்று கேட்கிறார்கள்.
2022ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலிய பெடரல் காவல்துறை இந்த இயக்கத்தை அச்சுறுத்தலாக அடையாளம் கண்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக, பன்முக கலாச்சார விவகார அமைச்சர் Anne Aly, இந்த Sovereign Citizens இயக்கத்தின் உறுப்பினர்கள் அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பிற்கு ஒரு தனித்துவமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறார்கள் என்று எச்சரித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |