ரஷ்யாவிடம் அடிபணிந்த ஆஸ்திரியா? திட்டவட்டமாக மறுத்த சான்சலர்
ரஷ்யாவுக்கு ரூபிளில் பணம் செலுத்த பிரபல ஐரோப்பிய நாடான ஆஸ்திரியா ஒப்புக்கொண்டதாக ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான TASS தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது படையெடுத்து வரும் ரஷ்ய மீது மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
இதன் காரணமாக ரஷ்யாவின் பங்குச்சந்தை மற்றும் ரஷ்ய நாணயமான ரூபிளின் மதிப்பு கடும் சரிவை சந்தித்தது.
இதனையடுத்து, பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, ரஷ்யாவிடமிருந்து எரிவாயு வாங்கும் நாடுகள் அதற்கு ரூபிளில் பணம் செலுத்த வேண்டும் என புடின் அரசு உத்தரவிட்டது.
ஐபிஎல் போட்டியில் மோதிக் கொண்ட இளம் இந்திய வீரர்கள்! வைரலாகும் வீடியோ
ரூபிளில் பணம் செலுத்த பல ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஆஸ்திரியா இதற்கு ஒப்புக்கொண்டதாக ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான TASS செய்தி வெளியிட்டுள்ளது.
அதாவது, ரஷ்யாவின் எரிவாயுக்கு ரூபிளில் பணம் செலுத்த ஆஸ்திரிய சான்சலர் கார்ல் நெஹம்மர் ஒப்புக்கொண்டதாக TASS செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால், TASS வெளியிட்டுள்ள செய்தியை ஆஸ்திரிய சான்சலர் கார்ல் நெஹம்மர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.