தடுப்பூசி போட்டவர்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாட்டிலிருந்து விடிவு! பிரபல ஐரோப்பிய நாடு அறிவிப்பு
பிரபல ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவின் பெரும்பாலான பகுதிகளில் தடுப்பூசி போட்ட மக்களுக்கு இன்று முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
பிராந்தியத்தின் அடிப்படையில் மாறுபடும் விதிகள் கீழ், திரையரங்குகள், அருங்காட்சியகங்கள் மற்றும் பிற கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு இடங்களை மீண்டும் திறக்க அனுமதிக்கப்படுகின்றன.
நாளை கடைகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும். சில ஆஸ்திரிய பிராந்தியங்கள் இன்று உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களை மீண்டும் திறக்கின்றன, மற்ற பிராந்தியங்களில் மாதத்தின் பிற்பகுதியில் திறக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், உணவகங்களுக்கு இரவு 11 மணிக்கு ஊரடங்கு உத்தரவு இருக்கும், மேலும் பொது போக்குவரத்து, கடைகள் மற்றும் பொது இடங்களில் முகக் கவசம் கட்டயாம் அணிய வேண்டும்.
தடுப்பூசி போடாதவர்கள் தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இருப்பார்கள், அவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்.
மளிகைப் பொருட்களை வாங்குவது, மருத்துவரிடம் செல்வது அல்லது உடற்பயிற்சி செய்வது போன்ற சில குறிப்பிட்ட காரணங்களுக்காக மட்டும் அவர்கள் வெளியே செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.