மீண்டும் முழு ஊரடங்கை அமுல்படுத்தும் பிரபல ஐரோப்பிய நாடு!

Covid-19 Lockdown Europe Austria
By Ragavan Nov 19, 2021 12:26 PM GMT
Report

மேற்கு ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் மீண்டும் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவருவதால், ஆஸ்திரியாவில் வரும் திங்கட்கிழமை முதல் முழு ஊரடங்கு அமுலுக்கு வரும் என அதிபர் அலெக்சாண்டர் ஷால்லென்பெர்க் தெரிவித்துள்ளார்.

திங்கள் முதல் தொடங்கி 10 நாட்களுக்குப் பிறகு மதிப்பீடு செய்யப்படும் என்று ஷாலன்பெர்க் கூறினார்.

அதேபோபோல், 2022, பிப்ரவரி 1-ஆம் திகதி முதல் கோவிட்-19 தடுப்பூசிகளை கட்டாயமாக்க ஆஸ்திரிய அரசு திட்டமிட்டுள்ளது.

மீண்டும் முழு ஊரடங்கை அமுல்படுத்தும் பிரபல ஐரோப்பிய நாடு! | Austria Lockdown From Monday Covid Cases SoarPhoto: REUTERS/Leonhard Foeger

ஊரடங்கு விதிகளின்படி, அத்தியாவசியப் பொருட்களுக்கான ஷாப்பிங் மற்றும் உடற்பயிற்சி போன்ற சில விதிவிலக்குகளுடன் மக்கள் இனி தங்கள் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள்.

இந்த வாரத்தின் தொடக்கத்தில், ஆஸ்திரியா ஏற்கனவே தடுப்பூசி போடப்படாத அல்லது சமீபத்தில் குணமடையாதவர்களுக்கு மட்டும் ஊரடங்கு விதிகளை நடைமுறைப்படுத்தியது. அவ்வாறு செய்த முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடு ஆஸ்திரியா என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் முழு ஊரடங்கை அமுல்படுத்தும் பிரபல ஐரோப்பிய நாடு! | Austria Lockdown From Monday Covid Cases SoarPhoto: REUTERS/Michaela Rehle

ஆனால் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. வியாழன் அன்று, கிட்டத்தட்ட ஒன்பது மில்லியன் மக்கள் வசிக்கும் ஆஸ்திரியாவில் 15,000-க்கும் மேற்பட்ட புதிய கோவிட் தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சமீபத்திய நாட்களில் தடுப்பூசிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது, மேலும் 66 சதவீத மக்கள் இப்போது முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளனர்.

ஐரோப்பிய கண்டம் முழுவதும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மற்ற ஐரோப்பிய நாடுகளும் கட்டுப்பாடுகளை கடுமையாக்குகின்றன.

ஆஸ்திரியாவின் அண்டை நாடான ஹங்கேரி, வரும் சனிக்கிழமை முதல் வீட்டிற்குள் முகக்கவசம் அணிவதை மீண்டும் கட்டாயமாக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் முழு ஊரடங்கை அமுல்படுத்தும் பிரபல ஐரோப்பிய நாடு! | Austria Lockdown From Monday Covid Cases SoarPhoto: REUTERS/Leonhard Foeger

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US