உயர் எச்சரிக்கையில் பிரபல ஐரோப்பிய நாடு! என்ன காரணம்?
பிரபல ஐரோப்பிய நாடான ஆஸ்திரியா தொடர் பனிச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளதால், நாடு உயர் எச்சரிக்கை நிலையில் உள்ளது.
வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுக்கு இடையில், 100 க்கும் மேற்பட்ட பனிச்சரிவுகள் Tyrol-யின் மேற்குப் பகுதியைத் தாக்கியுள்ளன.
ஆஸ்திரியாவின் பிரபலமான பனிச்சறுக்கு பகுதிகளில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர், Tyrol-யில் மட்டும் 8 பேர் இறந்துள்ளனர்.
அண்டை நாடான சுவிட்சர்லாந்திலும் இரண்டு பேர் இறந்துள்ளனர், மேலும் அங்கு பனிச்சரிவில் சிக்கிய பலரை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரியாவில் நிலைமை முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு மோசமாக இருக்கிறது மற்றும் மேலும் பனிச்சரிவுகள் வரக்கூடும் என்று உள்ளூர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
Tyrol-யில் மேலும் பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்று வீசும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரியாவின் பனிச்சரிவு எச்சரிக்கை நிலை நான்காவது நிலைக்கு உயர்த்தப்பட்டது, அதாவது மிகப் பெரிய பனிச்சரிவுகள் சாத்தியமாகும்.
பிராந்தியம் முழுவதும் அவசர நடவடிக்கைகளில் 480 மலை மீட்புப் பணியாளர்களும், ஆஸ்திரிய ஆயுதப்படைகள் மற்றும் இராணுவ ஹெலிகாப்டர்களும் ஈடுபட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.