மகளிர் உலகக்கிண்ணம்: 113 ரன் வித்தியாசத்தில் வெற்றி..பாகிஸ்தானுக்கு மரணஅடி
பாகிஸ்தான் அணிக்கு எதிரான மகளிர் உலகக்கிண்ணப் போட்டியில், அவுஸ்திரேலியா 113 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மகளிர் உலகக்கிண்ணப் போட்டி லீட்ஸில் நடந்தது.
முதலில் ஆடிய அவுஸ்திரேலியா 199 ஓட்டங்கள் குவித்தது. எல்லிஸ் பெர்ரி (Ellyse Perry) 71 (48) ஓட்டங்களும், ஜார்ஜியா வோல் 39 (28) ஓட்டங்களும் விளாசினர். சாதியா இக்பால், ரமீன் ஷமிம் மற்றும் நஷ்ரா சந்து தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 13.4 ஓவர்களில் 86 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக முனீபா அலி 32 ஓட்டங்களும், ஃபாத்திமா சனா 17 ஓட்டங்களும் எடுத்தனர்.
அவுஸ்திரேலிய அணியின் தரப்பில் சோபி மோலினீக்ஸ், அனபெல் சதர்லேண்ட் மற்றும் எல்லிஸ் பெர்ரி தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |