சீமானுக்கு உதவிய ஆட்டோ பிரச்சாரம்! ரிப்போர்ட் மூலம் கிடைத்த நல்ல செய்தி
2024 -ம் ஆண்டு மக்களவை தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி குறித்த ரிப்போர்ட் மேலிடத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது, நடந்து முடிந்த தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம், யாருக்கு குறைவு, எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்த ரிப்போர்ட் அரசுக்கு சென்றுள்ளதாம்.
மக்களவை தேர்தல்
பொதுவாகவே மக்களவை தேர்தல் முடிந்தால் மாவட்ட செயலாளர்கள் மூலம் இது போன்ற ரிப்போர்ட் செல்வது வழக்கமான ஒன்று தான். இதுவே ஆளும் கட்சியாக இருந்தால் உளவுத்துறை கொடுக்கும் ரிப்போர்ட்டும் கூடுதலாக செல்லும்.
அந்தவகையில், அண்மையில் தமிழகத்தில் நடந்த மக்களவை தேர்தல் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முக்கியமான ரிப்போர்ட் ஒன்று சென்றுள்ளதாம்.
அதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளில் 40 -லும் திமுக வெல்லும். மேலும், கோவையிலும் திமுகவே வெல்லும். இதில் அதிமுகவிற்கு இரண்டாம் இடம் கிடைக்கும்.
திருச்சி, பொள்ளாச்சி, ஈரோடு ஆகிய தொகுதிகளில் இழுபறி நீடித்தாலும் திமுகவே அங்கு வெல்லும். ஆனால், தென் மாவட்டங்களில் அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறாது என்று ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளதாம்.
நாம் தமிழர் கட்சி
இதில் மற்ற கட்சிகளை பார்த்தால் தென் மாவட்டங்களில் பாஜக இரண்டாம் இடத்தை பிடிக்கும். அங்கு, நாம் தமிழர் கட்சி முன்பு எடுத்ததை விட குறைவாக வாக்கு சதவிகிதம் எடுக்கும்.
மேலும், நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைக்காததால் சென்னையில் உள்ள தெருக்களில் ஆட்டோ மூலம் மைக் சின்னத்தை கொண்டு சேர்த்தது.
சென்னையில் ஆட்டோ மூலம் மைக் சின்னத்தை பிரபலப்படுத்தி உள்ளதால், அங்கே நாம் தமிழர் கட்சிக்கு நல்ல வாக்கு வங்கி கிடைக்கும். அதைத்தவிர வட மாவட்டங்களில் அதிக வாக்குகள் கிடைக்காது என்று ரிப்போர்ட்டில் இருக்கிறதாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |