ஆட்டோவில் தவறவிட்ட 40 சவரன் நகைகளை நேர்மையுடன் பொலிஸிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்
தெலங்கானா தம்பதி தவறவிட்ட 40 பவுன் தங்க நகைகளை நேர்மையுடன் பொலிஸிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
40 சவரன் நகைகள்
தமிழக மாவட்டமான சென்னை முகப்பேர் கிழக்கு, பாரதிதாசன் சாலையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சரவணன் (40).
இவர் கடந்த 15-ம் திகதி அன்று தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த குடும்பத்தினரை ஆட்டோவில் சவாரி ஏற்றிச்சென்று அண்ணாநகரில் இறக்கி விட்டார்.
அவர்கள் இறங்கி சென்றதும் ஆட்டோவில் பை ஒன்று இருப்பதைக் கண்டார். அதை எடுத்து பார்த்தபோது உள்ளே தங்க நகைகள் மற்றும் செல்போன் இருந்தது தெரியவந்தது.
பின்னர் அவர், அதை உடனடியாக அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர், பை மற்றும் தங்க நகைகளின் அடையாளங்களை வைத்தும் உரிமையாளரை பொலிஸார் சரிபார்த்தனர்.
இதையடுத்து, 40 பவுன் தங்க நகைகள் மற்றும் செல்போன் அடங்கிய பை அதன் உரிமையாளர் நித்தேஷிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனையறிந்த காவல் ஆணையர் அருண், நேர்மையுடன் செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநரை நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் அளித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |