ஆட்டோ டாப்பில் நகரும் பூந்தோட்டம்.. குளுமையான சவாரியை ஏற்படுத்த புதுமையான முயற்சி
ஆட்டோவின் மேற்கூரையில் பூச்செடிகள் வளர்த்து தனது ஆட்டோவை நகரும் பூந்தோட்டமாக மாற்றியுள்ளார்.
நகரும் பூந்தோட்டம்
இந்திய மாநிலமான தெலுங்கானா, மெகபூபாபாத்தை சேர்ந்த அஞ்சி என்பவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். வாகன பெருக்கத்தால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை அறிந்த அஞ்சி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார்.
இதனால் தனது ஆட்டோவின் மேற்கூரையில் பூச்செடிகளை வளர்த்து நகரும் பூந்தோட்டமாக மாற்றினார். இது வித்தியாசமாக இருப்பதால் மக்களும் அதனை ஆர்வமுடன் பார்த்தனர். மேலும், இவர் ஆட்டோவின் உள்ளே மின்விசிறி ஒன்றையும் வைத்துள்ளார்.
மக்கள் ஆர்வம்
அஞ்சியின் ஆட்டோ மீது பூச்செடிகள் இருப்பதால் அதில் பயணம் செய்யவும் குளுமையாக உள்ளது. இதனால், ஆட்டோவில் பயணிக்க ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் அதிக அளவில் சவாரி கிடைப்பதால் கணிசமான அளவில் அஞ்சி வருமானம் ஈட்டி வருகிறார்.
மேலும், கோடைக்காலம் நெருங்கி வருவதால் இவரின் ஆட்டோவில் பயணிக்க மக்கள் அதிகம் விரும்புவார்கள் என்று கூறப்படுகிறது. இதனிடையே, அப்பகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் அஞ்சியை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |