கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்: சுவையான அவல் பாயாசம்.., 10 நிமிடத்தில் செய்யலாம்
கிருஷ்ண ஜெயந்தி ஆண்டுதோறும் கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடுகின்ற இந்து சமய விழாவாகும்.
இதில் கிருஷ்ணருக்கு பிடித்தமான இனிப்பு, கார வகை உணவுகளை படைத்து வழிபடுவார்கள்.
அந்தவகையில், கிருஷ்ணருக்கு பிடித்த சுவையான அவல் பாயசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- நெய்- 2 ஸ்பூன்
- முந்திரி- 10
- உலர் திராட்சை- 5
- அவல்- 1 கப்
- பால்- 3 கப்
- Condensed milk- ¼ கப்
- வெல்லம்- ½ கப்
- ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து சூடானதும் அவள் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் அதே பாத்திரத்தில் பால் சேர்த்து மிதமான தீயில் நன்கு கொதிக்கவைக்கவும்.
கொதித்து வந்ததும் இதில் Condensed milk மற்றும் அவள் சேர்த்து 5 நிமிடம் நன்கு கொதிக்கவிடவும்.
பின் இதில் வெல்லத்தை கரைத்த வெல்லப்பாகு மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவைக்கவும்.
இறுதியில் இதில் நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான அவல் பாயசம் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |