இனி நீங்கள் நினைப்பதை உங்கள் அவதார் பேசும்…வாட்ஸ் அப்பில் அசத்தும் புதிய அப்டேட்
உலகின் முன்னணி தகவல் தொடர்பு செயலியான வாட்ஸ் அப்பில், தங்களது சொந்த முகங்களையும், அதன் உணர்ச்சிகளையும் ஸ்டிக்கர்களாக வடிவமைத்து உரையாடல் நடத்தும் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட்
சுமார் 200 கோடி பயனர்களை உள்ளடக்கிய வாட்ஸ் அப் நிறுவனம், தவிர்க்க முடியாத முதன்மை தகவல் தொடர்பு செயலியாக செயல்பட்டு வருகிறது.
இதன் தாய் நிறுவனமான மெட்டா, இத்தகைய பிரம்மாண்ட பயனர்களை தொடர்ந்து தக்கவைத்து கொள்வதற்காக அடுத்தடுத்து புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது.
அந்த வகையில் தற்போது பயனர்கள் தங்கள் சொந்த அவதார் உருவங்களை வாட்ஸ் அப் செயலியிலேயே வடிவமைத்து, தங்களது அரட்டைகளை மேலும் சுவாரசியமாக மாற்ற வழிவகை செய்துள்ளது.
இந்த அவதார் உருவங்கள் மூலம் பயனர்கள் மிகத்துல்லியமாக தங்கள் உணர்வுகளை அவதார் உருவங்களாக வடிவமைத்து உரையாடல் நடத்த முடியும்.
வாட்ஸ் அப்பின் இந்த புதிய அப்டேட் மூலம் நாம் உருவாக்கும் நம் சொந்த அவதார் உருவங்களில் லைட்டிங், ஷேடிங், ஹேர் ஸ்டைல், தோல் நிறத்தை மாற்றுவது, கண்கள், மூக்கு, காது, வாய் என்று ஒவ்வொன்றையும் உங்களைப் போல நீங்கள் உருவாக்கலாம்.
வாட்ஸ் அப் அவதார் உருவாக்கும் வழிமுறை
வாட்ஸ் அப்பில் Settings skin tone பகுதிக்குச் சென்று Avatar என்பதைத் தேடவும்.
அதை தொடர்ந்து Avatar > create your avatar என்பதைத் கிளிக் செய்து, உருவாக்குவதற்கான படிகளை பின்பற்றவும்.
பின் ஸ்கின் டோன், சிகை அலங்காரம், மூக்கு போன்ற பல்வேறு அம்சங்களை பயன்படுத்தி உங்களுக்கான பிரத்யேக அவதார் ஸ்டிக்கர்களை உருவாக்குங்கள்.
இறுதியில் “Done” என்ற பட்டனை கிளிக் செய்து உங்களுடைய அவதாரை சேமித்து வைத்து கொள்ளுங்கள்.
பின் அதை உங்களுடைய உரையாடலில் நீங்கள் பயன்படுத்தலாம்.
இந்த அவதார் உருவங்களை உங்களது வாட்ஸ் அப்பில் ப்ரொபைல் புகைப்படமாகவும் வைத்து கொள்ளலாம்.