இனி ஸ்க்ரீன்ஷாட் எடுக்க முடியாது! வாட்ஸ் அப்பில் வரும் அட்டகாசமான அம்சம்
வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் பாதுகாப்பை அதிகரிப்பதற்காக அட்டகாசமான ஒரு புதிய அம்சத்தை கொண்டு வருகிறது.
அதன்படி View Once அம்சம் கொண்டு வரப்படுகிறது. இந்த அம்சம் Android க்கான WhatsApp பீட்டாவின் எதிர்காலத்தில் கொண்டு வரப்படும் என WABetaInfo அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக குறுந்தகவல்களுக்கான View Once அம்சம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டாவில் சோதனை செய்யப்படுகிறது. பயனர்கள்View Once மெசேஜ் அனுப்பும் முன் இந்த பட்டனை க்ளிக் செய்து அதன் பின் அனுப்ப வேண்டி இருக்கும்.
WABetaInfo/jagran
இந்த அம்சம் மூலம் போட்டோக்கள் வீடியோக்கள் மட்டுமல்லாது டெக்ஸ்ட் மெசேஜும் ஸ்கிரீன்ஷாட் எடுக்கப்படுவதையும் தடுக்கலாம்.
மெசேஜ் டைப் செய்யும் போது, அதன் அருகிலேயே பச்சை நிறத்தில் இருக்கும் 'Send' ஐகான் பூட்டு குறியீடுடன் உள்ளது. அந்த ஐகானை லாங்க் பிரஸ் செய்தால், சில ஆப்ஷன்கள் தோன்றும். அதில், ஒன் டைம் வியூ என்ற ஆப்ஷன் கொண்டு வரப்படுவதாக கூறப்படுகிறது.