Whatsappல் தெரியாத்தனமாக இந்த தவறை செய்துட்டீங்களா? இப்படி செய்தால் போதும்
வாட்ஸ் அப்பில் பல்வேறு அம்சங்கள் இருந்தாலும் அதில் எல்லாமும் எல்லாருக்கும் தெரிவதில்லை. அதில் முக்கியமான ஒன்று தான் Archive மற்றும் unarchive..!
வாட்ஸ் அப் Archive
Archive என்பது தனிநபர் அல்லது வாட்ஸ்அப் குழுவிலிருந்து மெசேஜ் பெற விரும்பாத பயனர்கள் சேட்-டை மறைத்து வைக்க உதவுகிறது. இருப்பினும் இந்த சேட்கள் அழியவே அழியாது..! சிலர் தவறுதலாக Archive செய்துவிட்டு எப்படி unarchive செய்வது என தெரியாமல் திணறுவார்கள்.
ஆண்ட்ராய்டு போன் பயனர்கள் சேட் Archive செய்ய முதலில் சேட் பக்கம் சென்று எந்த சேட்-டை ஆர்ஷிவ் செய்ய வேண்டும் என்பதை செலக்ட் செய்ய வேண்டும். அந்த சேட்- டை அழுத்தி பிடிக்க வேண்டும், இப்போது பாக்ஸ் போன்ற ஐகான் ( downward arrow) பட்டனை கொடுக்க வேண்டும்.
alphr
unarchive செய்வது எப்படி?
இப்போது அந்த சேட் Archive செய்யப்பட்டு archived section பக்கத்திற்கு சென்று விடும்.
பின்னர் சேட் unarchive செய்ய விரும்பினால், சேட் பக்கத்தில் மேலே, வலப்புறத்தில் உள்ள archived section மெனுவிற்கு செல்ல வேண்டும். அங்கு எந்த சேட் unarchive செய்ய வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து அழுத்தி பிடிக்க வேண்டும்.
பாக்ஸ் போன்ற ஐகான் (upward arrow) பட்டனை கொடுத்தால் சேட் unarchive செய்யப்படுவதை காணலாம்.
writingviews