சுவிட்சர்லாந்தில் சரிவடைந்துள்ள வேலை நேரம்: வெளியான ஆய்வு முடிவுகள்
சுவிட்சர்லாந்தில் கொரோனா தொற்றின் தாக்கம் காரணமாக 2020ல் 3.4% அளவுக்கு வேலை நேரம் சரிவடைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
பெடரல் புள்ளியியல் அலுவலகத்தின் ஆய்வுகளின்படி, கடந்த பத்து ஆண்டுகளில் சராசரி வேலை நேரம் படிப்படியாகக் குறைந்து வருவதாக தெரியவந்துள்ளது.
2020ல், சுவிட்சர்லாந்தில் பணிபுரியும் ஒருவர் ஆண்டுக்கு சராசரியாக 1,495 மணிநேரம் வேலை செய்துள்ளதாகவும், இது பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட 7.2% குறைவாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாகவே, தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இதில், ஹொட்டல் துறையில் வேலை நேரம் 22.2% அளவுக்கு சரிவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
முந்தைய பத்தாண்டுகளில், 2010 மற்றும் 2019 க்கு இடையில், ஒரு பணியாளரின் வருடாந்திர வேலை நேரம் 3.9% குறைந்துள்ளது, இது, அதிக தொழிலாளர்கள் பகுதி நேரப்பணியை தெரிவு செய்ததும், விடுப்பு எடுத்துக்கொண்டுள்ளதாலும், சரிவடைந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், கடந்த பத்து ஆண்டுகளில், முழுநேர ஊழியர்களுக்கான ஒப்பந்த விடுமுறை வாரங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 5.0 லிருந்து 5.2 வாரங்களாக அதிகரித்துள்ளது.