பொலிவான முகத்தை பெற செய்யக்கூடாத 4 தவறுகள்.., என்னென்ன தெரியுமா?
பொதுவாக பெண்கள் அனைவரும் தங்களின் முகத்தை பொலிவாகவும், அழகாகவும் வைத்துக்கொள்ளத்தான் விரும்புவார்கள்.
ஆனால் சூரிய கதிர்கள், உணவு முறை போன்ற காரணத்தினால் முகத்தில் சுருக்கங்கள், பருக்கள் போன்றவை தோன்றி முகத்தின் அழகை கெடுத்துவிடும்.
அந்தவகையில், முகத்தை பொலிவாக வைத்துக்கொள்ள இந்த 4 தவறுகளை செய்யாமல் இருக்கவேண்டும். அது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
1. முகத்தை சுத்தம் செய்யாமல் இருப்பது
பகலில் மேக்கப் போடுவதற்கு முன்பும், இரவில் தூங்குவதற்கு முன்பும் முகத்தை சுத்தம் செய்ய வேண்டும். இதனால் சருமம் பளபளப்பாக இருக்கும்.
2. மாய்ஸ்சரைசர் பயன்படுத்தும் முறை
தினமும் குளித்த பின் மாய்ஸ்சரைசர் பயன்படுத்தாமல் இருப்பது சருமத்தில் பாதகமான விளைவை ஏற்படுத்துகிறது. இதனால் சருமத்தில் ஈரப்பதம் இல்லாமல் சுருக்கங்கள் தோன்றும்.
3. தயாரிப்பைக் கண்காணிப்பது முக்கியம்
நாம் பயன்படுத்தும் மாய்ஸ்சரைசரில் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் சில பொருட்களும் இருக்கலாம். எனவே, சருமத்திற்கு ஏற்ற தயாரிப்புகளைப் பற்றி தோல் நிபுணரிடம் தெரிந்து கொள்ளலாம்.
4. ஆரோக்கியமற்ற உணவுகளை உண்ணுதல்
அன்றாடம் நாம் சாப்பிடும் உணவுகள் நமது ஆரோக்கியத்தையும், தலைமுடி மற்றும் சருமத்தையும் பாதிக்கிறது. எனவே, சருமத்திற்கு ஆரோக்கியமான உணவை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |